முடவாட்டுக்கால் சூப்!

முடவாட்டுக்கால் சூப்!

மூட்டுவலி,கெண்டைக்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் வலி தசைபிடிப்புகளுக்கு சிறந்த மருந்து. மூட்டுகளுக்கிடையேயான சவ்வை வளர்ச்சியடைய உதவுகிறது. உடல் உள்ளுறுப்புகள் பலமடையவும் சர்க்கரை பிரச்சனை குறையவும் உதவுகிறது.

மலைகளில் இரு பாறைக்களுக்கிடையே வளரும் தாவரம் இது. கொல்லிமலை, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் வளரக்கூடியது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

ஒருவருக்கு இருபத்தைந்து கிராம் அளவிற்க்கு கிழங்கு சூப் பதினைந்து, நாட்களுக்கு அருந்திவர அதன் பலன் தெரியும்.

சூப் செய்ய தேவையான பொருட்கள்:

இருபத்தைந்து கிராம் முடவாட்டுக்கால் கிழங்கு மேல் தோல் சீவி கட் பண்ணி வைத்துக்கொள்ளவும்.
அரைத்தக்காளி
அரை வெங்காயம்
நான்கைந்து பூண்டுபற்கள்
இஞ்சி சிறுதுண்டு
மிளகு அரை ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
சோம்பு அரை ஸ்பூன்
தணியா சிறிது அல்லது கொத்தமல்லி சிறிது.
பட்டை சிறு துண்டு.

இந்தப் பத்துப் பொருட்களை ( ஒன்றிரண்டு குறைந்தாலும் பரவாயில்லை) மிக்ஸியில் அரைத்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கால் மணிநேரம் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் அளவிற்க்கு சுண்டியதும் வடிகட்டி அருந்தவும்.

வயதானவர்கள் அருந்த உடம்பு வலி தீரும். நல்ல உறக்கமும் வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com