இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை சட்னி எப்படி செய்வது தெரியுமா? 

முருங்கைக்கீரை சட்னி.
முருங்கைக்கீரை சட்னி.

இதுவரை நீங்கள் விதவிதமான சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள், ஆனால் முருங்கைக் கீரையை வைத்து சட்னி செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உண்மைதான். முருங்கைக் கீரையை வைத்து நாம் சூப்பர் சுவையில் சட்னி செய்ய முடியும். இந்த முருங்கைக்கீரை சட்னி சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். 

மேலும் இது அனைவரும் சாப்பிட உகந்த ஒரு ஆரோக்கியமான உணவாகும். முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு இந்த சட்னியை செய்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள். 

தேவையான பொருட்கள்: 

முருங்கைக்கீரை - ½ கப்

எண்ணெய் - சிறிதளவு

தேங்காய் - ½ கப்

புளி - ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது சூடானதும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் மற்றும் முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முருங்கைக் கீரையை நீண்ட நேரம் வதக்க வேண்டாம். அப்படி உதைக்கினால் அதில் உள்ள சத்துக்கள் போய்விடும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
முடி வளர்ச்சியைத் தூண்டும் பருப்பு வகைகள்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே! 
முருங்கைக்கீரை சட்னி.

பின்னர் அந்த கலவையை மிக்ஸியில் சேர்த்து, தேங்காய், உப்பு, புளி மற்றும் அரை கப் நீர் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

அடுத்ததாக வாணலியை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கிளறினால், சூப்பர் சுவையில் ஆரோக்கியமான முருங்கைக்கீரை சட்னி தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com