சப்பாத்தி, தோசைக்கு ஸ்பெஷல் சப்ஜி! குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்ப செய்யும் சீக்ரெட் இதோ!

Veg Sabji
Veg Sabji
Published on

வீட்டில் சப்பாத்தி, பூரி, தோசைக்கு தொட்டுக் கொள்ளும் வகையில் சப்ஜி ஒன்றை தயார் செய்ய ஆசைப்படுவோம். பெரும்பாலும் சப்ஜி, குருமா வகைகளில் தேங்காய் சேர்த்தே ரெசிபி தயாராகும். துருவிய தேங்காயை அரைத்தோ அல்லது அதிலிருந்து தேங்காய் பால் எடுத்து செய்யப்படும் குருமாகள் நமக்கு தெரியும்.

தேங்காய் இல்லாமல் எந்த மாதிரியான சப்ஜி செய்யலாம், இதோ ஒரு வெஜிடபிள் சப்ஜி வகையை இங்கு காணலாம்.

தேவையானவை

தக்காளி - 3

முந்திரி பருப்பு - 10

பூண்டு - 8 பற்கள்

பெரிய வெங்காயம் - 6

உருளைக்கிழங்கு - 2

கேரட் - 1

பச்சை பட்டாணி - சிறிய கப்

பீன்ஸ் - 10

காலிபிளவர் - 1 கப்

உப்பு - தேவைக்கு

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 ஒரு டேபிள் ஸ்பூன்

கஸ்தூரி மேத்தி - 2 சிட்டிகை (வெந்தய இலை)

கொத்தமல்லித்தழை தழை - சிறிது (நறுக்கியது)

தாளிக்க - கடுகு, கருவேப்பிலை, சோம்பு (சிறிது)

தயிர் - 1 சிறிய கப்

செய்முறை

அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, சோம்பு போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி பூண்டு, முந்திரிப்பருப்புகளை சேர்த்து மிக்சியில் நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இந்த அரைத்த விழுதை போட்டு வதங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், உரித்த பச்சைப் பட்டாணி, பீன்ஸ் போன்றவர்களை போட்டு நன்றாக வதக்கி அத்துடன் தேவையான உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லிதூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு அரைத்து வைத்திருக்கும் தக்காளி முந்திரிக் கலவையை அதில் ஊற்றி ஒரு நிமிடம் வதக்கி கெட்டித் தயிரையும் ஊற்றிக் கிளறி, உப்பு பார்த்து மேலே மூடி போட்டு சிம்மில் வைத்து காய் வேகும் வரை வேகவிடவும்.

ஓரளவு மசாலா, காய் வெந்து வாசம் வந்ததும் இறக்கு முன் கைகளால் நசுக்கிய கஸ்தூரி மேத்தி இலைகள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை போட்டு சூட்டிலேயே மூடி வைக்கவும்.

சப்பாத்தி, பூரி, தோசைக்கு இது சூப்பர் காம்பினேஷன் ஆக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் வகையில் இந்த சப்ஜியின் ருசி இருப்பதற்கு முக்கிய காரணமாகும் முந்தரி பருப்பு என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தேங்காய்க்கு மாற்றாகவே முந்திரி பருப்பை நாம் உபயோகிக்கிறோம். ஒரு முறை நீங்கள் செய்து பார்த்தால் இதனுடைய ருசியில் அடிக்கடி இதை செய்வீர்கள் என்பது நிச்சயம்.

இதற்கு தயிரும் முந்திரியும் முக்கியம். அப்படி தயிர் இல்லை எனில் தேங்காய்ப்பால் சேர்த்தும் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com