கோடை வெயிலுக்கேற்ற நுங்கு நாட்டுச்சர்க்கரை குல்பி!

நாட்டுச்சர்க்கரை குல்பி
நாட்டுச்சர்க்கரை குல்பி

தேவையான பொருட்கள்:

பால் அரை லிட்டர் .

நுங்கு ஏழு.

நாட்டுச்சர்க்கரை ஏழு ஸ்பூன். 

முந்திரி பாதாம் தேவையான அளவு.

ஏலக்காய் மூன்று. 

அரை லிட்டர் பாலை கால் லிட்டர் அளவிற்க்கு அடிபிடிக்காமல் கலந்து விட்டு காய்ச்சவும்.பொடித்த ஏலக்காய், பாதாம் முந்திரி, கரைத்து வடிகட்டிய நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

தோல் நீக்கிய நுங்குகளை மிக்ஸியில் அடித்து சேர்த்து கலக்கி விட்டு அடுப்பை நிறுத்தவும். 

நன்கு ஆறியவுடன் குல்பி அச்சுகளிலோ வேறு பாத்திரங்களிலோ ஊற்றி ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை பீரிசரில் குளிர வைத்து எடுத்து பரிமாறவும். கோடைக்கேற்ற குளுகுளு நுங்கு குல்பி. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

மல்டிகிரைன் இட்லி, குழிப்பணியாரம்:

மல்டிகிரைன் இட்லி, குழிப்பணியாரம்
மல்டிகிரைன் இட்லி, குழிப்பணியாரம்

கம்பு,சோளம், கோதுமை, ராகி, உளுந்து, இட்லி அரிசி எல்லாம் ஒவ்வொன்றும் அரை கிலோ  சேர்த்து மூன்று கிலோ. ஐம்பது  வெந்தியம்  சேர்த்து  மிஷினில்  அரைத்துக் கொள்ளவும். இரவு   உங்களுக்கு  தேவையான அளவு எடுத்து இட்லி மாவு பதத்திற்க்கு கரைத்து வையுங்கள். மறுநாள்  இட்லி ஊற்றிக்கொள்ளவும். காலையில் கரைத்து வைத்தால் இரவு இட்லி செய்யலாம். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு. ஆரோக்கியமான உணவு. இதில் ஆப்பம், குழிப்பணியாரமும் செய்யலாம்.

முருங்கைகீரை பொடி!

முருங்கைகீரையை தினமும் சமையல் செய்து சாப்பிட முடியாது. பொடியாக வைத்துக்கொண்டால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அரை ஸ்பூன் பொடி இரண்டு பிடி கீரைக்கு சமம்.

முருங்கைகீரை பொடி
முருங்கைகீரை பொடி

இரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.முடி உதிர்தலை கட்டுப்படுத்தி வளரச்செய்யும்.

கால்சியம், விட்டமின்ஸ் மினரல் சக்தி நிறைந்தது.பார்வை குறைபாடு, மூட்டுவலி, தோல் சுருக்கம் இவற்றிற்க்கு நிவாரணம்.

இதையும் படியுங்கள்:
நம்மைச் சுற்றியே இருக்கு நமக்கான வாழ்க்கைப் பாடம்!
நாட்டுச்சர்க்கரை குல்பி

முருங்கைகீரையை சுத்தப்படுத்தி நிழலில் நன்றாக காய வைக்கவும். கையில் பிடித்தால்  நொருங்கும் அளவிற்க்கு காய்ந்ததும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளலாம்.

தினமும்  பொரியல், குழம்பில் என சிறிது சேர்த்துக் கொள்ளலாம். தோசைமாவில் கலந்து தோசை வார்க்கலாம். பொடிதோசையைப் போல் தூவியும்  விடலாம். வளரும் குழந்தைகளுக்கு தேவையான சக்தி எளிதாக கிடைத்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com