சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

வரகு பிரியாணி
வரகு பிரியாணி in.pinterest.com
Published on

வரகு பிரியாணி 

தேவை : வரகு அரிசி - ½ கப், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு- 2, பச்சை மிளகாய் -1, சோம்பு - ¼ டீஸ்பூன், தக்காளி - ½, வெங்காயம் - 1, புதினா இலை - 6, பிரிஞ்சி இலை - 1, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் - ½ கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
வேலையை பறிக்குமா AI? மக்கள் எண்ணம் என்ன?
வரகு பிரியாணி

செய்முறை: வரகு அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய், பிரிஞ்சி இலை, நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, வரகு அரிசியைச் சேர்க்கவும். மிதமான தீயில் வேகவைக்கவும். வாரே வாவ்! பிரியாணி ரெடி! தயிர்ப் பச்சடியுடன் பரிமாற சுவை அள்ளும்.

குதிரைவாலி வெஜிடபிள் பக்கோடா

தேவை: வேகவைத்த குதிரைவாலி அரிசி - ¼ கப், கேரட் துருவல் –  ¼   கப், குடைமிளகாய் நறுக்கியது - 2 மேஜைக்கரண்டி, வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது), மிளகாய்ப் பொடி 2 டீஸ்பூன், கரம் மசாலா - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவைக்கு.

குதிரைவாலி வெஜிடபிள் பக்கோடா
குதிரைவாலி வெஜிடபிள் பக்கோடா www.youtube.com

செய்முறை: குதிரைவாலி சாதத்தை நன்கு மசித்து, துருவிய கேரட், குடைமிளகாய், வெங்காயம், மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானாவுடன், உருட்டி வைத்த குதிரைவாலி உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மாலைநேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுத்து அசத்துங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com