சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

ராகி அடை
ராகி அடைwww.youtube.com

ராகி அடை

தேவை: ராகி மாவு ¼ கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் 1, கடுகு – ¼  டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை: ராகி மாவை 3 நிமிடம் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய். பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளித்து மாவில் கொட்டவும். சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாகப் பிசையவும் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் தாளில் எண்ணெய்த் தடவி மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, அடை போலத் தட்டவும்.

தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய்விட்டு கட்டு எடுக்கவும்.

அவியல் அல்லது வெல்லம் கெட்டித் தயிர் இந்த ராகி அடைக்கு ஏற்ற சைட் டிஷ்.

ராகி புட்டு

தேவை: ராகி மாவு - ½ கப், சக்கரை - 4 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை. தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்.

ராகி புட்டு
ராகி புட்டுwww.youtube.com

செய்முறை: ராகி மாவை வெறும் வாணலியில் மணம் வர வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரைச் சேர்த்துத் தண்ணீர் தெளித்து மணல் போல பிசைந்துகொள்ளவும். (மாவை பிடித்தால் பிடிக்க வரவேண்டும் உதிர்த்துவிட்டால் உதிரவேண்டும்).

இதையும் படியுங்கள்:
கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான 6 காரணங்கள் இவைதான்! 
ராகி அடை

இந்தக் கலவையை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்து, தேங்காய்த் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கொடுக்க சூப்பர் சுவையை விரும்பி சாப்பிடுவார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com