

குதிரைவாலி தக்காளி சாதம்
தேவை: குதிரைவாலி அரிசி - ½ கப், தக்காளி - 1, வெங்காயம் -1, சாம்பார் பொடி - ¾ டீஸ்பூன், மஞ்சள் பொடி- ¼ டீஸ்பூன், கரம் மசாலா ¼ டீஸ்பூன், புதினா இலை 5, கடுகு - ¼ டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு.
செய்முறை: அரிசியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய்ச் விட்டுக் கடுகு, புதினா மற்றும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, கரம் மசாலா சேர்த்து,
பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும். வேக வைத்த அரிசியைச் சேர்த்து, மெதுவாகக் கிளறவும். சுவையான குதிரைவாலி தக்காளி சாதம் தயார்.
சாமை சாம்பார் சாதம்
தேவை : சாமை – ½ கப், துவரம் பருப்பு - 4 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5 கேரட், பட்டாணி, பீன்ஸ் - ¼ கப், புளிக் கரைசல் - 1 கப், சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், தனியா, கடலைப் பருப்பு, பெருங்காயம், வெந்தயம் - தலா ¼ டீஸ்பூன், தக்காளி – ½, காய்ந்த மிளகாய் - 1, தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் -1 டீஸ்பூன், கறிவேப்பில்லை - சிறிது.
செய்முறை: அரிசி, பருப்பை 20 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா, கடலைப் பருப்பு, மிளகாய், தேங்காய், வெந்தயம், தக்காளி சேர்த்து வதக்கி, ஆறியவுடன் அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை வதங்கியதும் காய்கறிகள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பிறகு சாம்பர் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். புளிக் கரைசல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். அரைத்த கலவை, அரிசி மற்றும் பருப்பையும் சேர்க்கவும். அரைக் கப் தண்ணீர் சேர்த்து, இரண்டு விசில் விட்டு, பத்து நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.