சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

குதிரைவாலி பிடி கொழுக்கட்டை
குதிரைவாலி பிடி கொழுக்கட்டைhttp://tamilonline.com/

குதிரைவாலி பிடி கொழுக்கட்டை

தேவை: குதிரைவாலி அரிசி – ½ கப், எண்ணெய் -1 டீஸ்பூன், கடுகு ¼ டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, பெருங்காயம் ஒரு சிட்டிகை, கேரட் துருவல் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
க்ரூசிஃபெரஸ் வெஜிடபிள்ஸ் பற்றி தெரியுமா?
குதிரைவாலி பிடி கொழுக்கட்டை

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், கேரட் துருவல் போட்டு வதக்கவும். ஒன்றரைக் கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர்கொதித்ததும், குதிரைவாலி அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும், தண்ணீர் வற்றியவுடன், அடுப்பை அணைத்து, ஆறியவுடன் சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் எட்டு முதல் பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

புதினா சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

தினை சாலட்

தேவை: தினை அரிசி - 3 டீஸ்பூன், குடைமிளகாய் - சிறிய துண்டு, இஞ்சிச் சாறு - 1 டீஸ்பூன், கேரட் பொடியாக நறுக்கியது - 3 டீஸ்பூன், மாங்காய் - ஒரு சிறிய துண்டு, தேன் - ¼ டீஸ்பூன், மிளகுப் பொடி -
½  டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

தினை சாலட்
தினை சாலட் www.youtube.com

செய்முறை : தினை அரிசியை 30 நிமிடம் தண்ணீர் விட்டு ஊற வைத்துக்கொள்ளவும். கால் கப் தண்ணீர் விட்டு வேக. நறுக்கி வைத்த மாங்காய், கேரட், குடைமிளகாய் போட்டு, இஞ்சிச் சாறு, தேன் விட்டு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

கூடுதல் மனத்திற்கு புதினா சேர்த்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com