சத்தான மொறு மொறு பச்சைப் பயறு தோசை!

பச்சை பயறு தோசை
பச்சை பயறு தோசைImage credit - youtube.com

-வி. லக்ஷ்மி

குழந்தைகளுக்கு சத்தானதாகவும், சுவையாகவும் அவர்களுக்கு பிடித்த இந்த மாதிரி செய்து கொடுத்தால் ஆசை ஆசையாக விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க…

தேவையானவை:

பச்சரிசி – ½ தம்ளர், பச்சபயறு – ½ தம்ளர், சீரகம் – 1/4டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய், கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பச்சப்பயறு, பச்சரிசி இரண்டையும் நன்றாகக் கழுவி இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் அரைக்க வேண்டும். அரைக்கும்போது ¼ டீஸ்பூன் சீரகம், ஒரு துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி கொத்தமல்லி ஒரு கொத்து  கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்தெடுத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து அதை 2 மணி நேரம் கழித்து பயன்படுத்தவும். தோசைக் கல் நன்கு காய்ந்த உடன் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றவும். கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சிவந்த வந்த உடன் திருப்பி போட... கமகமவென்று வாசம் பசியைத் தூண்டும். அப்படியே தட்டில் போட்டு சைட்டிஷ் ஆக கார சட்னி. இல்லையென்றால் பூண்டு சட்னி இரண்டுமே சுவையாக இருக்கும்.

பச்சைப்பயறு தோசை வயிற்று புண் சீராக்கும். கெட்ட கொழுப்பு குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ஆற்றல் கொண்டது.

;

கோதுமை பணியாரம்
கோதுமை பணியாரம்Image credit - youtube.com

தேவையானவை:

கோதுமை மாவு – 2 கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், வெல்லம் – 1½ கப், ஏலக்காய் – ¼ டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா செல்லப் போகிறீர்களா? இதைப் படித்துவிட்டுப் புறப்படுங்கள்!
பச்சை பயறு தோசை

செய்முறை:

ஒரு பவுலில் 2 கப் கோதுமை மாவைச் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 2 டீஸ்பூன் அரிசி மாவைச் சேர்க்கவும். அதன் பிறகு தேங்காய்த் துறுவல், உப்பு சேர்க்கவும். ஆப்ப சோடா மாவு சேர்க்கவும். 1½ கப் வெல்லத்தைத் தூள் ஆக்கிக்கொள்ளவும். அடுப்பு பற்றவைத்து ஒரு பாத்திரத்தில் அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி, சூடான உடன் வெல்லத் தூள்களைப் போடவும். கரண்டியைவிட்டு வெல்லம் கரையும் வரை கிளறவும். பிறகு மிதமான சூடானவுடன் கோதுமை மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். அதில் ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். அதன் பிறகு அடுப்பில் பணியார சட்டி வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கரைத்து வைத்து இருக்கும் பணியார மாவை சட்டியில் ஊற்றி, ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பிப் போட, இப்பொழுது பணியாரம் ரெடி. இட்லி மாவிலும் இந்தப் பணியாரம் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com