சத்தான கட்லட் மற்றும் ஸ்வீட் பொட்டேட்டோ ரோஸ்ட் சமையல் குறிப்புகள்!

Roast Recipes
Cutlet and sweet potato
Updated on

பசலைக் கீரை-பாசிப் பருப்பு கட்லட் ரெசிபி 

தேவையான பொருட்கள்:

1.பாசிப் பருப்பு (moong dal)  1 கப் 

2.துருவிய கேரட் 1 கப்

3.பொடிசா நறுக்கிய பசலைக் கீரை  ½ கப்

4.பொடிசா நறுக்கிய பச்சை மிளகாய் 3

5.இஞ்சி பேஸ்ட் 1 டீஸ்பூன் 

6.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன் 

7.சிவப்பு மிளகாய் தூள் 1டீஸ்பூன்

8.தனியா தூள் 1 டீஸ்பூன்

9.கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன்

10.உலர்ந்த மாங்காய் பவுடர் 1 டீஸ்பூன் 

11.வறுத்த கடலை மாவு 4 டேபிள் ஸ்பூன்

12.எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் 

13.உப்பு தேவையான அளவு 

செய்முறை:

பாசிப் பருப்பை இரண்டு மணிநேரம் ஊறவைத்து, வடித்துக்கொள்ளவும். கொஞ்சமா தண்ணீர் ஊற்றி, குழையாமல், மென்மையாகும் வரை வேகவைத்துப் பின் ஆறவிடவும். அதனுடன் துருவிய கேரட், நறுக்கிய பசலைக் கீரை, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், மாங்காய் பவுடர், உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து, வட்ட வடிவ பட்டிகளை (patties) தயார் செய்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லட் பட்டிகளை வைத்து மிதமான தீயில் வேகவிடவும். ஒரு பக்கம் கிரிஸ்பியாகி பிரவுன் கலர் வந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு கிரிஸ்பியானவுடன் எடுத்து தட்டில் அடுக்கவும். சூடாக, புதினா சட்னி அல்லது இனிப்பு புளிப்பு சட்னி அல்லது யோகர்ட் தொட்டு சுவைத்து உண்ணவும்.

ஸ்வீட் பொட்டேட்டோ மிளகு தூவல் ரோஸ்ட் ரெசிபி 

தேவையான பொருட்கள்:

1.ஸ்வீட் பொட்டேட்டோ பெரியது  l

2.மிளகுத் தூள் தேவையான அளவு 

3.உப்பு தேவையான அளவு 

4.தண்ணீர் தேவையான அளவு

5.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் 

இதையும் படியுங்கள்:
ஆலு டோஸ்ட் பிரட் இட்லி: காலை உணவுக்கான எளிய செய்முறை!
Roast Recipes

செய்முறை:

ஸ்வீட் பொட்டேட்டோவை நன்கு கழுவி சிறிய நெல்லிக்காய் அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதை ஒரு கடாயில் போட்டு கொஞ்சமா தண்ணீர் ஊற்றவும். கிழங்கு குழைந்துவிடாமல், கிள்ளும் பதத்திற்கு குலுக்கி விட்டு மிதமான தீயில் வேகவிடவும். அதிகப்படியாக தண்ணீர் அடியில் நின்றால் வடித்து விடவும். பின் அதே கடாயை கிழங்குடன் அடுப்பில் வைத்து மிளகுத்தூள் மற்றும் உப்பு தூளை கிழங்கின் மேல் தூவி கிளறிவிடவும்.

பின் எண்ணெயை பரவலாக கிழங்கு துண்டுகள் மீது ஊற்றி மிளகுத் தூள் மொறு மொறுவென்று வறுபட்டு கிழங்கில் ஒட்டிக்கொள்ளும்போது இறக்கி வைக்கவும். சாம்பார் சாதம், தயிர் சாதம், கூட்டு சாதம் போன்ற எதனுடனும் சேர்த்து உண்ணலாம்.

logo
Kalki Online
kalkionline.com