சட்டுனு செய்யலாம் சத்தான சாலட்டுகள்!

போடேடோ சாலட்
போடேடோ சாலட்

மாலை நேரம் வந்ததும் குழந்தைகளுக்கு தரக்கூடிய எளிய ஸ்நாக்ஸ் வகைகள் வகைகளை தேடுவோம். இதில் சத்து மிகுந்த சாலட் வகையிலான இது போன்ற ஸ்நாக்ஸ் வகைகள் செய்து தந்தால் நிச்சயம் குழந்தைகளுக்கு விருப்பமாக மாறிவிடும். வாங்க ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய ஸ்வீட் போடேடோ சாலட் & நியூட்ரி கொண்டைக்கடலை சாலட் ரெசிபிகளை பார்ப்போம்.

ஸ்வீட் போடேடோ சாலட்:

தேவை:

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - மூன்று
சில்லி சாஸ் - அரை டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ்- ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள்- அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன் சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
ஆலிவ் ஆயில்- ஒரு டீஸ்பூன்


செய்முறை:
உருளைக்கிழங்குகளை மண் போக நன்கு கழுவி கொதிக்கும் நீரில் போட்டு அதிகமாக வேகவிடாமல் ஐந்து நிமிடங்களில் வெளியே எடுக்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் உருளைக் கிழங்குகளை தோல் உரித்து பெரும் கண்கள் உள்ள கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். இதில் கொடுத்துள்ள மற்ற அனைத்து பொருட்களையும் உருளைக்கிழங்குடன் நன்றாக கலந்து கொண்டு ஒரு பவுலில் போட்டு விரும்பினால் மேலே கொத்து மல்லித்தழை அல்லது புதினா சிறிது தூவலாம்.

நியூட்ரி  கொண்டைக்கடலை சாலட்:

கொண்டைக்கடலை சாலட்
கொண்டைக்கடலை சாலட்yuotube.com

தேவை:
கொண்டைக்கடலை - 1 சிறியகப்
சிவப்பு முட்டைக்கோஸ் - 1/4 கப்
குடைமிளகாய் -1/4கப்
ஆலிவ் ஆயில் -1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மிக்ஸ் ஹெர்ப்ஸ் - தேவைக்கு
தக்காளி - 1
வெள்ளரி -1
பெரிய வெங்காயம்-1
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை- சிறிது


செய்முறை:
கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து நன்கு வேகவைத்து நீரை வடிகட்டி எடுத்து ஒரு பவுலில் போடவும். அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி கலக்கவும் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளமாக சன்னமாக நறுக்கிய வெள்ளரி, குடைமிளகாய், சிவப்பு முட்டைக்கோஸ் ஆகியவற்றுடன் மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு சேர்த்து மேலே நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் ஆயுள் தானே உயரும்!
போடேடோ சாலட்

புரதம் நிறைந்த கொண்டைக்கடலை  வைத்து எளிதாக தயாரிக்கும் இந்த சாலட் குழந்தைகளுக்கு ஏற்ற நியூட்ரி சாலட்தானே? கலர் கலராக பார்த்தாலே ஆவலைத் தூண்டும் சத்தான இந்த  சாலட்.


குறிப்பு -  சாலட் வகைகளில் குழந்தைகள் அறியாமல் நம் விருப்பம் போல் சத்துள்ள முளைகட்டிய பயிறு வகைகள், சீவிய காய்கறிகள் பயன்படுத்தி சத்துகளை மேம்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com