
மாடு கன்று ஈன்றதும் முதல் 3 நாட்கள் கிடைக்கும் பால் தான் சீம்பால். இது அடிக்கடி கிடைக்காது. இந்த பால் அதிக கெட்டி தன்மை கொண்டதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சீம்பால் - 1/2 லிட்டர்
வெல்லம் - 200 கிராம்
சுக்கு தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
நல்ல மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
செய்முறை:
முதலில் 'டீ' அரிப்பில் பாலை வடிகட்டி கொள்ளலாம். பிறகு பாலுடன் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து அதில் சுக்கு தூள், ஏலக்காய் தூள், மிளகு தூள், சேர்த்து கலந்து பின் இந்த பாலை சிறு சிறு கிண்ணங்களில் ஊற்ற வேண்டும்.
பின்னர் அடுப்பில் இட்லி வேக வைக்கும் பாத்திரத்தை வைத்து இட்லி தட்டின் மேல் ஒவ்வொரு குழியிலும் ஒரு பால் நிறைந்த கிண்ணத்தை வைத்து வேக விடவும். 20 நிமிடங்கள் வேகட்டும். பின் மூடியை திறந்து வெந்ததா என்று பார்க்க ஒரு ஸ்பூன் வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் இருக்கும். பின் இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு ஒரு பாத்திரத்தில் தட்டி எடுத்தால் கிண்ணத்தின் அளவிலே கேக் கிடைக்கும்.
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து நிறைந்த கேக் ஆகும்.