சத்தான ருசியான வாழைப்பூ போண்டா - வாழைப்பழ பூரண போளி ரெசிபிஸ்…!

வாழைப்பூ போண்டா:
வாழைப்பூ போண்டா:www.youtube.com

வாழைப்பூ போண்டா: 

கடலைப்பருப்பு ஒரு கப் 

பச்சை மிளகாய் 2 

காய்ந்த மிளகாய்‌1

இஞ்சி ஒரு துண்டு 

சோம்பு 1 ஸ்பூன் 

வெங்காயம் 1

வாழைப்பூ நறுக்கியது 1 கப்

கொத்தமல்லி சிறிது 

உப்பு தேவையானது பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

பொரிக்க எண்ணெய்

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி,  உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதில் சோம்பு ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய வாழைப்பூ, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து எண்ணெய் சூடானதும் எலுமிச்சம் பழ சைசுக்கு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன் கலரில் பொரித்தெடுக்கவும்.

சத்தான ருசியான வாழைப்பூ போண்டா தயார். இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

இன்ஸ்டன்ட் தேங்காய் சட்னி:

தேங்காய் அரை கப் 

பொட்டுக்கடலை 2 ஸ்பூன் 

உப்பு தேவையானது 

பச்சை மிளகாய் இரண்டு 

பூண்டு இரண்டு பல் 

புளி கொட்டை பாக்களவு

 எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட நொடியில் சட்னி தயார்

வாழைப்பழ பூரண போளி!

வீட்டில் விசேஷத்திற்காக வாங்கும் வாழைப்பழங்கள் அதிகம் மீந்து விட்டால் கவலைப்பட வேண்டாம். அதனைக் கொண்டு போளி செய்து சாப்பிடலாம்.

வாழைப்பழ பூரண போளி...
வாழைப்பழ பூரண போளி...

கோதுமை மாவு ஒரு கப் 

மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் 

ரவை 1/4 கப்

நெய் 4 ஸ்பூன் 

வாழைப்பழம் 6 

வெல்லம் 1/2 கப்

முந்திரி 10 

பாதாம் 10 

ஏலக்காய் 2

கோதுமை மாவுடன் ஒரு சிமிட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நெய் ஒரு ஸ்பூன் விட்டு தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். போளிக்கு மேல் மாவு தயார்.

மிக்ஸியில் முந்திரி ,பாதாம், ஏலக்காய் ஆகியவற்றை பொடி பண்ணி அத்துடன் வாழைப்பழம் ஆறையும் தோல் உரித்து போட்டு நன்கு அரைத்தெடுக்கவும். ரவை கால் கப் அளவிற்கு எடுத்து நெய் விட்டு வாசம் வரும் வரை வறுத்து அதில் வாழைப்பழம் அரைத்த கலவையை சேர்த்து அத்துடன் அரைக்கப் வெல்லம், நெய் இரண்டு ஸ்பூன் கலந்து வாணலியில் போட்டு அடுப்பை நிதானமாக எரிய விட்டு கிளறி விட பூரணம் ரெடி.சுய சந்தேகத்திலிருந்து வெளியேறுவது எப்படி?

இதையும் படியுங்கள்:
சுய சந்தேகத்திலிருந்து வெளியேறுவது எப்படி?
வாழைப்பூ போண்டா:

இப்போது எலுமிச்சை அளவு மேல் மாவை எடுத்து சிறியதாக தட்டி அதில் வாழைப்பழப் பூரணத்தை வைத்து மூடி வாழை இலையில் எண்ணெய் தடவி போளிகளாக தட்டி வைக்கவும். 

தோசை கல்லில் ஒவ்வொன்றாக போட்டு சிறிது நெய் விட்டு இரு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்க சுவையான வாழைப்பழ போளி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com