பொருள் ஒன்று… சத்தான ரெசிபிகள் மூன்று!

அகத்திக் கீரை...
அகத்திக் கீரை...
Published on

-வசந்தா மாரிமுத்து

அகத்திக் கீரை கூட்டு

 தேவை:

அகத்திக் கீரை - 2 கைப்பிடி

பாசிப்பருப்பு-14 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

தாளிக்க

எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு , கிள்ளிய மிளகாய் - 2

உப்பு – தேவைக்கு

அகத்திக் கீரை கூட்டு
அகத்திக் கீரை கூட்டு

செய்முறை:

குக்கரை அடுப்பில் வைத்து பாசிப் பருப்பில் நீர் விட்டு குழைய வேகவைக்கவும். சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய அகத்திக் கீரையை பருப்போடு சேர்த்து வேகவிட்டு உப்பு போடவும். வெந்தவுடன் இறக்கி தேங்காய் துருவல் தூவி விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு , மிளகாய் தாளித்து போடவும். இக்கூட்டை சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாய் இருக்கும்.

அகத்திக் கீரை மண்டி

தேவை:

அகத்திக் கீரை - 1 கப்

சின்ன வெங்காயம்-10

வர மிளகாய், பச்ச மிளகாய் - தலா 1

 தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன்

தாளிக்க-

கடுகு, உளுத்தம் பருப்பு,

சிவப்பு மிளகாய்

உப்பு, எண்ணெய் தேவைக்கு

அரிசி களைந்த நீர் - 1 கப்

அகத்திக் கீரை மண்டி
அகத்திக் கீரை மண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் கிள்ளி தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சுத்தம் செய்த நறு கீரையை போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய பின் உப்பு சேர்த்து அரிசி களைந்த நீர் ஊற்றி  கொதிக்க விடவும்.

பச்சை மிளகாய், சீரகம்,, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு விழதாக அரைத்து வெந்த கீரையில் சேர்த்து கடைந்து கெட்டியாகும் வரை  கலந்து இறக்கவும். சுவையான கீரை மண்டி தயார். சாதம், தோசைக்கு சாப்பிட  ருசியாக இருக்கும்.

அகத்திக் கீரை சொதி

தேவை:

அகத்திக் கீரை - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

பால் - 1 கப்

உப்பு - தேவைக்கு

மஞ்சள் தூள் - சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிது

அகத்திக் கீரை சொதி
அகத்திக் கீரை சொதி

செய்முறை:

ரு பாத்திரத்தில்  2 டம்ளர் தண்ணீர் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் தக்காளி , கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்.

பின் அதில் உப்பு, ம. தூள் சேர்த்து வெந்ததும் நறுக்கிய கீரை போட்டு வெந்ததும் அதில் பால் ஊற்றி, கொதி வந்ததும் கறிவேப்பிலை சிறிது கிள்ளி போடவும். கொதி வந்ததும் இறக்கினால் அகத்திக் கீரை சொதி தயார்.

இது உடல் உஷ்ணத்தை தணிக்கும். குளிர்ச்சி தரும் பித்தத்தை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். மலச்சிக்கல் நீங்கும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி அகத்திக் கீரைக்கு உண்டு. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com