பொருள் ஒன்று விதவிதமான சத்தான முள்ளங்கி ரெசிபிகள் மூன்று!

முள்ளங்கி சப்பாத்தி
முள்ளங்கி சப்பாத்திwww.thandoraa.com

-வசந்தா மாரிமுத்து

முள்ளங்கி சப்பாத்தி 

தேவை:

வெள்ளை முள்ளங்கி-தோல்சீவிய துருவல் - 1/2 கப்

கோதுமை மாவு - 1 கப்

சோள மாவு - 1/4 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி/வெங்காயம், பச்சை மிளகாய் - சிறிது

எண்ணெய் - தேவைக்கு, உப்பு – சிறிது

செய்முறை:

ரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, உப்பு, துருவிய முள்ளங்கி, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து பிசைந்து சிறிது நீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து 1 மணி நேரம் கழித்து மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தோசைக் கல்லில் ஒவ்வொன்றாகப் போட்டு எண்ணெய் விட்டு   சுட்டு எடுக்கவும். சுவையான சத்தான முள்ளங்கி பராத்தா ரெடி.

முள்ளங்கி வறுவல்

தேவை:

முள்ளங்கி - 1/4 கி

வெங்காயம் - 1

சோம்பு - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

மிளகாய்தூள் - 1 ஸ்பூன் பூண்டு பல் - 4

தக்காளி - 1

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

கரம்மசாலா - 1 ஸ்பூன்

முள்ளங்கி வறுவல்
முள்ளங்கி வறுவல் www.youtube.com

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் வட்டமாக நறுக்கிய முள்ளங்கியை போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன் மிளகாய் தூள், கரம்மசாலா, பூண்டு நகக்கி யும்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி சிறிது நீர் விட்டு மூடி வைக்கவும். நன்கு வெந்ததும் மேலே கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான முள்ளங்கி வறுவல் ரெடி.

முள்ளங்கி  பாசிப்பருப்புகூட்டு

தேவை:

முள்ளங்கி - 1/4 கி

பாசிப்பருப்பு- 1/4 கப்

தக்காளி - 1

சின்ன வெங்காயம்-6

பச்சை மிளகாய் - 2

தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்

எண்ணெய் 3 ஸ்பூன்

உப்பு  - தேவைக்கு

முள்ளங்கி  பாசிப்பருப்புகூட்டு
முள்ளங்கி பாசிப்பருப்புகூட்டு

செய்முறை:

ரு குக்கரில் கழுவிய பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் தக்காளி, பொடியாக நறுக்கிய முள்ளங்கி துண்டுகள்  போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம், தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

வெந்த முள்ளங்கியை - வதக்கிய வெங்காயத்தில் போட்டு கொதிக்கவிட்டு, உப்பு போட்டு, மிளகாய்தூள், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதித்த பின் இறக்கி கொத்தமல்லி தழை சிறிது தூவி இறக்கவும். சுவையான முள்ளங்கி கூட்டு தயார். சப்பாத்தி, தோசைக்கு சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com