அது என்னது One Pot ரசம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

One Pot ரசம்
One Pot ரசம்
Published on

தொடர்ந்து மாறிவரும் நம் வாழ்க்கை முறையில் சமையலுக்கு செலவழிக்கும் நேரமும் குறைந்து வருகிறது. ஆனால், அனைவருக்குமே சுவையான உணவை சாப்பிட வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறுவதில்லை. இதற்கு தீர்வு தரும் ஒன்றுதான் One Pot சமையல் முறை. அதாவது, ஒரே பாத்திரத்தில் பல பொருட்களை சேர்த்து குறைந்த நேரத்தில் சுவையான உணவை தயாரிக்கலாம். இந்தப் பதிவில் One Pot சமையல் முறையில் ரசம் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

  • அரிசி: 2-3 பேருக்கு ஒரு கப் அரிசி போதுமானது.

  • தக்காளி: 2-3 நடுத்தர அளவிலான தக்காளி

  • பருப்பு: 1/4 கப் துவரம் பருப்பு அல்லது மசூர் தால்

  • மிளகாய் வற்றல்: 5-6 மிளகாய் வற்றல்

  • கடுகு: 1 டீஸ்பூன்

  • வெங்காயம்: 1 நடுத்தர அளவிலான வெங்காயம்

  • கறிவேப்பிலை: சிறிதளவு

  • கொத்தமல்லி: சிறிதளவு

  • உப்பு: தேவையான அளவு

  • மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்

  • கொத்தமல்லி தூள்: 1 டீஸ்பூன்

  • மிளகாய் தூள்: 1/2 டீஸ்பூன்

  • ரசம் பொடி: 1 டீஸ்பூன்

  • நெய் அல்லது எண்ணெய்: 2 டீஸ்பூன்

செய்முறை: 

முதலில் அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம் தக்காளியை நன்றாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை தண்ணீரில் ஊற வைத்து, கருவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

இப்போது ஒரு மிக்ஸியில் மிளகாய் வற்றல், கடுகு, கொத்தமல்லி, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் ரசப்பொடியை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 

இதையும் படியுங்கள்:
மது அருந்துதல் Vs. புற்றுநோய்: ஒரு விரிவான விளக்கம்!
One Pot ரசம்

இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் கடுகு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பருப்பு, கருவேப்பிலை, அரைத்த மசாலா போன்றவற்றை சேர்த்து கலக்கவும். பின்னர், அரிசியை போட்டதும் இந்தக் கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.  

பாத்திரத்தை நன்கு மூடி, மிதமான சூட்டில் வேக வைக்கவும். அரிசி வெந்ததும் இறுதியாக கொத்தமல்லித் தழை தூவி கிளறினால் சூப்பரான சுவையில் One Pot ரசம் தயார். இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com