பச்சைப் பயறு சுண்டல்

பச்சைப் பயறு சுண்டல்

உமா காஷ்யபன், நெமிலிச்சேரி.

தேவை: பச்சைப் பயறு – 2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, உப்பு – சுவைக்கேற்ப, கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காய – 1 சிட்டிகை, தேங்காய்த் துருவல் – ½ மூடி.

செய்முறை: பச்சைப் பயறை ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாணலியில் பயறைப் போட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக வைத்து தனியாக எடுத்து கொள்ளவும். (குக்கரில் போட்டால் அதிகம் குழைந்து விட வாய்ப்புண்டு). வாணலியில் எண்னஎய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பெங்காயத்தூள் சேர்த்து அத்த்டன் வந்த பச்சைப்பயறைப் போட்டு கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com