
தேவையான பொருட்கள்:
மைதா மாவு /கிலோ, சர்க்கரை – ¼ கிலோ, அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன், கெட்டி நெய் - 3 ஸ்பூன், பாதாமி -3(பொடி செய்தது) ஏலக்காய்-4 (பொடி செய்தது) டால்டா (அ) ரிபைன்ட் ஆயில் - பொரிப்பதற்கு.
செய்முறை :
முதலில் மைதா மாவை பூரிக்குப் பிசைவதுபோல் பிசைந்துகொள்ள வேண்டும். அதை 2 (அ) 3 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி மாவையும், கெட்டி நெய்யையும் பிசைந்து, குழைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மைதா மாவை 5 அல்லது 6 பெரிய அப்பளமாக இட்டுக்கொள்ள வேண்டும். சர்க்கரையைப் பாகாக கம்பிப் பதத்திற்கு செய்துகொள்ள வேண்டும். மைதா மாவு அப்பளங்கள் ஒவ்வொன்றின் மேலும் சர்க்கரைப் பாகு கலவையை ஒரு பக்கம் தடவ வேண்டும். பின் எல்லா அப்பளங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துச் சுருட்டி வைக்கவும். பின் இவ்வாறு சுற்றப்பட்ட மைதா அப்பளக்கலவையை சிறு சிறு துண்டுகளாகச் செய்து சின்ன அப்பளமாகக் குழவியில் இட்டுக்கொள்ளவும். அடுப்பில் வாணலியில் ரிபைன்ட் ஆயிலைச் சுட வைக்கவும். சின்ன அப்பளங்களை வாணலியில் பொரித்து எடுக்கவும். இவ்வாறு பொரிக்கப்பட்டவைகளைச் சர்க்கரைப் பாகில் நனைத்து, தனியாக எடுத்து தாம்பாளத்தில் அடுக்கவும். பின் ஒவ்வொரு பூரியின் மீதும், பொடி செய்த ஏலக்காய், பாதாமி கலவையைத் தூவ வேண்டும். இதுவே பாதாமி பூரிஆகும்.