தினம் ஒரு பாயசம் - 2 பனீர் பாயசம்.


தினம் ஒரு பாயசம் - 2
பனீர் பாயசம்.
Updated on
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

தேவையான பொருட்கள்:

பனீர் – 200 கிராம், சர்க்கரை - 1 கப், பிஸ்தா பருப்பு - 10, முந்திரி – 10, பால் - 6 கப், பாதாம் பருப்பு - 10, குங்குமப்பூ - சிறிது.

செய்முறை:

பாதாம் பருப்பில் பாதியைச் சிறிது வெந்நீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். முந்திரியை வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பைத் தோல் நீக்கி முந்திரியுடன் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடிகனமான கடாயில் பாலை விட்டு நன்கு காய்ச்சவும். பால் பாதியளவு குறைந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து
2 நிமிடம் கொதித்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் பனீரைத் துருவி எடுத்து இத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். மீதமுள்ள பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பை மெல்லியதாக சீவி மேலே தூவி இறக்கி வைத்துப் பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குளிரவைத்துப் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும். சூடாகவும் பரிமாறலாம்.

logo
Kalki Online
kalkionline.com