பருப்புசிலி பவுடர்!

பருப்புசிலி  பவுடர்!
Published on

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பூ/ கொத்தவரங்காய்/பீன்ஸ்

  • நறுக்கிய காய்-3 கப்

  • கடலை பருப்பு -1 கப்

  • துவரம் பருப்பு- 1 கப்

  • சீரகம். - 1 ஸ்பூன்

  • சிகப்பு மிளகாய்-10

  • எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

  • வாழைப்பூ/ கொத்தவரங்காய்/பீன்ஸ் மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • பின்பு மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  • இட்லி தட்டில் நன்றாக வேக வைத்து,ஆற விடவும்.

  • நன்றாக ஆறிய பின்,மிக்ஸியில் உதிர்த்து போட்டு விப்பர் மோடில் விட்டு,விட்டு பவுடராக்கவும்.

  • வாழைப்பூ/ கொத்தவரங்காய்/பீன்ஸ் போன்ற எந்த காயாக இருந்தாலும் உப்பு போட்டு வெந்தவுடன், அரைத்த பவுடரையும்,எண்ணெய்யில் சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டினால் சூப்பர் சுவையான பவுடர் பருப்புசிலி ரெடி.

  • கடுகு,சீரகம் தாளித்து கொட்டவும்.

  • இந்த முறையில் அதிகம் எண்ணெய் குடிக்காது.

  • ப்ரொட்டீன்,பைபர் நிறைந்த ஹெல்தி உணவாகும்.

    - சுஜாதா சிவசங்கர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com