
தேவை :
கொடி பசலைக் கீரை – 1 பெரிய கட்டு
சேனைக் கிழங்கு - 200 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 டேபுள் ஸ்பூன்
அரைக்க :
கடுகு - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
வர மிளகாய் -- 2
தாளிக்க :
கடுகு,உ.பருப்பு,
க.பருப்ப தலா 1 டீ ஸ்பூன்
வர மிளகாய் - 1
கருவேப்பிலை : சிறிது
செய்முறை :
முதலில் அரைக்க வேண்டியதை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தனியே வைக்கவும். எண்ணெய் சேர்க்கும் போது கடுகின் கசப்பு தெரியாது. பசலைக் கீரையை சுத்தம் செய்து சேனை துண்டங்களுடன் குழையாமல் வேக விடவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளாகாய் புளிக் கரைசல்,உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். பின் ஒரு கரண்டியால் சேனையை லேசாக மசித்து விட்டு அரைத்த கலவையை சேர்க்கவும்.
தாளிக்க கொடுத்தவற்றை சிறிது எண்ணெயில் தாளித்து கீரையுடன் சேர்க்கவும்
இதை சூடான சாதத்துடன் நெய் விட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். வைட்டமின்கள் நிறைந்த பசலையை சேனையுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது வாயு தொல்லை ஏற்படாமல் நல்ல பலன்களை உடலுக்கு தருகிறது.