பாசிப்பருப்பு காய்கறி சாலட் செய்வது எப்படி

பாசிப்பருப்பு காய்கறி சாலட் செய்வது எப்படி
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

தேவையானவை :

பாசிப்பருப்பு, பொடியா நறுக்கிய வெள்ளரி துண்டுகள், தோல் சீவி துருவிய மாங்காய், துருவிய கேரட், துருவிய தேங்காய்ப் பூ அனைத்தும் தலா அரை கப், பச்சை மிளகாய் 3, மல்லித் தழை கால் கட்டு, உப்பு தேவையான அளவு.

செய்முறை :

பாசிப்பருப்பை தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். வெள்ளரி, மாங்காய், கேரட் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து, ஃபிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும். பின் பருப்பிலுள்ள நீரை வடித்துவிட்டு, பருப்பை குளிர்வித்த காய்களுடன் சேர்க்கவும். பிறகு அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மல்லி இலைகள், தேங்காய்ப் பூ, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

சாப்பிடும்போது சாலட்டை மசாலா தயிரினால் டிரஸ்ஸிங் பண்ணி பரிமாறவும்.

தக்காளி ஒன்றை இரண்டாய் நறுக்கி, ஒரு பாதியின் விதைப் பகுதியை நீக்கிவிட்டு அந்தக் கப்பில் மசாலா தயிரை ஊற்றி சாலட்டின் நடுவில் வைத்தும், வெள்ளரி இலைகளாலும் சாலட்டை அலங்கரிக்கலாம்.

சத்தான சாலட் சடுதியில் தயார்.

logo
Kalki Online
kalkionline.com