பாவ் பாஜியும், பாதாம் லட்டும்!

arokya recipes
arokya recipesImage credit - youtube.com
Published on

சிறுவர் முதல் பெரியவர் வரை பாவ் பாஜி சாப்பிடுவது என்றால் தயங்காமல் ஓகே சொல்வார்கள். அனைவருக்கும் அவ்வளவு பிடித்தமான சிற்றுண்டி அது. குறிப்பாக சத்துக்கள் நிறைந்ததும் கூட. அதன் செய்முறை விளக்கத்தை இப்பதிவில் காண்போம். 

பாவ்:

தேவையான அளவு பாவ் பன்னை வாங்கி இரண்டாக வெட்டி வைக்கவும். தவாவை அடுப்பில் வைத்து அமுல் பட்டர் அல்லது விருப்பமான பட்டரை அதில் போட்டு, வெண்ணெய் உருகியதும், வெட்டிய பன்னை அதில் லேசாக டோஸ்ட் செய்து  எடுத்து வைத்து விட வேண்டும் பாவ்ரெடி. 

பாஜி செய்யத் தேவையான பொருட்கள்:

பொடியாக அரிந்த பீன்ஸ்- ஒரு கப்

பொடியாக அரிந்த உருளைக்கிழங்கு- ஒரு கப்

பொடியாக அரிந்த கேரட்- ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம்-11/2கப், 

தக்காளி - ஒரு கப்

மல்லித்தழை- தேவையான அளவு

பாவ்பாஜி பவுடர்- ஒரு டேபிள் ஸ்பூன்

சாம்பார் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன் 

எண்ணெய், உப்பு -தேவைக்கு ஏற்ப. 

செய்முறை:

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் ஒருகப் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, காய்கறிகளையும் போட்டு, பாவ் பாஜி  மற்றும் சாம்பார் பொடிகளை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு போட்டு வேகவைக்கவும். ஒரு விசில் வந்ததும் குக்கரை திறந்து காய்கறிகளை மசிக்கும் கரண்டியால் நன்றாக மசித்து விடவும். நன்றாக மசிந்து வந்ததும் தேவையானால் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு கீழே இறக்கி வைக்கவும். பாஜி ரெடி. 

சாப்பிடும் பிளேட்டுகளில் பாஜியை அழகாக தேவையான அளவு ஊற்றி அதன் மீது பொடியாக அரிந்து வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மல்லித்தழையைத் தூவி பாவ்பன்னை அதனோடு சேர்த்து வைத்து சாப்பிட கொடுக்கவும். விருப்பப்படுபவர்கள் பாஜிமீது சிறிதளவு வெண்ணையைச் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் பிடிக்காதவர்கள் வெள்ளரிக்காயை  பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

ருசிக்கு ருசி. சத்துக்கு சத்து. சாப்பிட்டால் நிறைவாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் நல்ல நார்ச்சத்தும் வைட்டமின்களோடு சேர்த்து கிடைக்கும். ஆதலால் இதை அனைவரும் விரும்பி உண்பர்.

பாதாம் லட்டு:

லட்டு செய்யத் தேவையான பொருட்கள்:

பாதாம் -ஒரு கப்

சர்க்கரை -ஒரு கப்

பால் -மூன்று கப்

இதையும் படியுங்கள்:
கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவ விடாதீர்கள்!
arokya recipes

செய்முறை:

பாதாம் பருப்பை நன்றாக ஊறவைத்து தோலை பிதுக்கி எடுத்து விட்டு தேவையான அளவு பாலை ஊற்றி பாதாமை மிக்ஸியில் இட்டு நன்றாக மைய அரைக்கவும். 

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரை கப் பாலில் ஜீனியை போட்டு மிதமான தீயில் வைத்து நன்கு கரைய விடவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் பாதாம் விழுதை, கரைந்த ஜீனியுடன் சேர்த்து அடி பிடிக்காமல் பார்த்து கைவிடாமல் கிளறவும். கையில் துணியை சுற்றிக்கொண்டால் விழுது தெறித்து கையில் விழாமல் இருக்கும். பின்னர் பாதாம் நன்றாக வெந்து கெட்டியாகி சிறிதளவு கலர் லேசான பழுப்பு நிறத்திற்கு வரும்பொழுது இறக்கி சிறிது நேரம் விட்டு லட்டுகளாக பிடித்து வைக்கவும். ருசி அசத்தும். சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக் கொண்டால் லட்டு அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com