
தேவையான பொருட்கள்:
கேரட் - அரை செ.மீ. கனசதுரமாக நறுக்கியது 2 கப் அளவு, பச்சைப்பட்டாணி ஊறவைத்தது 2 கப் அளவு, வெண்ணெய் - 2 ஸ்பூன், மைதா – 1½ ஸ்பூன், துருவிய சீஸ் - 2 ஸ்பூன், உப்பு – ½ ஸ்பூன், மிளகுத்தூள் – ½ ஸ்பூன், கசகசா - 1 ஸ்பூன், பிரெட்க்ரம்ப்ஸ் - 1 கப் அளவு, பால் - சிறிது, வெங்காயம் – ஒன்று.
செய்முறை:
கேரட், பட்டாணி இரண்டையும் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் வெண்ணெய், மைதா, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். ஒன்று சேர்ந்து பேஸ்ட் மாதிரி வர வேண்டும். காய் வடிகட்டிய நீருடன், சிறிது பால் சேர்த்து (அரைகப் அளவு இருக்க வேண்டும்) மைதா மிக்ஸுடன் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். சற்றுக் கெட்டியாக வரும்வரை கைவிடாமல் கிளற வேண்டும். சூட்டைச் சற்று தணித்து கசகசாவையும், துருவிய சீஸையும் சேர்த்து, சீஸ் உருகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
குட்டி கப்புகளில் முதலில் கேரட், பட்டாணி கலவையைப் போட்டு, அதன் மீது செய்து வைத்திருக்கும் சீஸ் விழுதைப் போட்டு மூடி, மேலாக, பிரெட் தூளைப் போட்டுத் தூவி மறைத்து, கப்புகளை அப்படியே பேக்கிங் அவனில் சுமார் 20 நிமிடங்கள் (பிரெட்தூள் பொன்னிறமாகும் வரை) வைத்து எடுக்கவும்.
பேக்கிங் அவன் இல்லாவிட்டால், ஒரு வாயகன்ற வாணலியில் மணலைக் கொட்டி சூடு பண்ணவும். அதன் மீது ஒரு அலுமினியத் தட்டில் கப்புகளை வைத்து அதை இன்னோர் தட்டினால் மூடி அதன் மீது தணல்களை வைக்கவும்.
பிறகு, விருப்பம்போல் அதைக் கொத்துமல்லித் தழையினாலோ, தேங்காய்த் துருவினாலோ அலங்கரிக்கலாம்.
- உமா மகேசுவரி, துர்காபூர்.