பெப்பர் மஷ்ரூம் கிரேவி!

பெப்பர் மஷ்ரூம் கிரேவி
பெப்பர் மஷ்ரூம் கிரேவி

மஷ்ரூம்களை பல விதமாக சமைத்து உண்பார்கள். அதில் இந்த பெப்பர் மஷ்ரூம் கேரேவியும் ஒரு வகை, இந்த மஷ்ரூம் கேரேவியை சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ், ஒயிட் ரைஸ் உடன் சேர்த்து சாப்பிடுவாதற்கு மிகவும் உகந்தது.

தேவையான பொருட்கள்:

பட்டன் மஷ்ரூம் – 2 பாக்கெட்,

பெரிய வெங்காயம் – 2,

தக்காளி – 1,

பூண்டு பல் – 2,

மிளகாய்த்தூள் – தேவையான அளவு,

இஞ்சி – 1 துண்டு,

தனியா தூள் – 1 டீஸ்பூன்,

மிளகு – 1 டீஸ்பூன்,

மஞ்சதூள் – 1 டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு,

கருவேப்பிலை – 1 இனுக்கு,

சோம்பு – ½ டீஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு அதில் மஷ்ரூம்யை போட்டு கழுவிக்கொள்ளவும். அதனுடன் ½ எலுமிச்சை சாறு சேர்த்து கொண்டால்சமைக்கும் வரை மஷ்ரூம் நிறம் மாறாமல் இருக்கும்.

2. பின்னர் இஞ்சி மற்றும் பூண்டை ஒரு மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்டாக தயார் செய்து வைத்துக்கொள்ளவும். அதன் பின் தக்காளி மற்றும் வெங்காயம் இதை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

3. அதன் பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு பாத்திரத்தில் 1/2 டீஸ்பூன் சோம்பு மற்றும் 1 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து சோம்பு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

4. அடுத்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு அதை மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து எடுத்து கொள்ளவும்.

5. பின்னர் ஒரு கடாயில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொல்லவும். எண்ணெய் காய்ந்ததும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் ஒரு பின்ச் அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

6. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேசஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும். பின் அதில் 1 டீஸ்பூன் அளவு மஞ்சத்தூள் சேர்த்து வதக்கிகொள்ளவும்.

7. பின்பு அதில் தேவையான அளவு தனியா தூள், மிளகாய் தூள், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் மஷ்ரூம்யை சேர்த்து நன்கு கலரி விடவும், பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.

8. மஷ்ரூம் தண்ணீர் சுரக்கும் தன்மை கொண்டதால் தேவை படும் போது மட்டும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். மஷ்ரூம்யை கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.

9. மஷ்ரூம் நன்கு வெந்ததும் நாம் அரைத்து வைத்துள்ள சோம்பு மற்றும் மிளகு தூளை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டவும். பின் கருவேப்பிலை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கிவிடவும்.

10. இப்போது சூடான சுவையான பெப்பர் மஷ்ரூம் கிரேவி தயார், இதை தட்டில் வைத்து பரிமாறி குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com