அன்னாசி பழத்தில் குழம்பு செய்யலாம் வாங்க!

Pineapple Curry
Pineapple Curry

துவரை உங்கள் வாழ்வில் எத்தனையோ வகையான குழம்புகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் பழத்தை வைத்து குழம்பு செய்து பார்த்ததுண்டா? இன்று பார்க்கப் போகிறீர்கள். ஆம் நாம் இன்று அன்னாசி பழத்தை வைத்து சுவையான குழம்பு செய்யப் போகிறோம். 

தேவையான பொருட்கள்: 

அன்னாசிப்பழம் - 1

வெங்காயம் - 2

தக்காளி - 2

மிளகு - ஸ்பூன் 

சோம்பு - 1 ஸ்பூன் 

புளி - தேவையான அளவு

மிளகாய் தூள் - 50 கிராம் 

கறிவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

எண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

முதலில் அன்னாசி பழத்தை தோலை நன்றாக சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல வெங்காயம், தக்காளியையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

வானலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள அன்னாசி பழத்தை அதில் போட்டு வதக்கிக் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு கறிவேப்பிலை சோம்பு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் புளி கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து, உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இறுதியில் கொதிக்க ஆரம்பித்ததும் பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான அன்னாசிப்பழக் குழம்பு ரெடி. 

நீங்கள் நினைக்கலாம் அன்னாசி பழ குழம்பு எப்படி இருக்குமோ என. ஆனால் உங்களின் எண்ணங்களுக்கு அப்படியே எதிர் மாறாக சுவை முற்றிலும் புதுமையாக அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையிலேயே இருக்கும். வேண்டுமானால் ஒருமுறை முயற்சித்துப் பார்த்து சொல்லுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com