Pineapple ரசம் செய்யத் தெரியுமா உங்களுக்கு?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Pineapple ரசம்
Pineapple ரசம்

ரசம் ஒரு பிரபலமான தென்னிந்திய உணவாகும். பொதுவாகவே புலியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ரசத்தின் நறுமண மசாலா பொருட்களுடன் சேர்ந்த சுவை ஒரு வித்தியாசமான அனுபவத்தை நமக்கு கொடுக்கும். இதுவரை எத்தனையோ விதமாக ரசம் வைத்து சாப்பிட்டிருப்பீர்கள். 

ஆனால் அன்னாசிப் பழத்தை பயன்படுத்தி ரசம் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உங்கள் குழந்தை அன்னாசி பழம் சாப்பிட அடப்பிடிக்கிறார் என்றால், அதை ரசமாக வைத்து ஒருமுறை கொடுத்துப் பாருங்கள், விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய ஊட்டச்சத்து மிகுந்த அன்னாசிப்பழ ரசம் எப்படி வைப்பது? என இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்: 

அன்னாசிப்பழம் - 1 கப்

சீரகம், மிளகு, கடுகு - 1 ஸ்பூன் 

புளி - 1 நெல்லிக்காய் அளவு

பச்சை மிளகாய் - 2

ரசப்பொடி - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சம் பழச்சாறு - 1 ஸ்பூன் 

நெய் - 2 ஸ்பூன் 

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை: 

முதலில் அன்னாசி பழத்தை தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக சீரகம், மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். 

பின்னர் பச்சை மிளகாயை தண்ணீரில் நன்கு கழுவி இரண்டாகக் கீரிக் கொள்ளுங்கள். பின்னர் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொண்டு, புளியை தண்ணீர் விட்டு கரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
Blockchain தொழில்நுட்பம் என்றால் என்ன?.. உலகமே மாறப்போகுது!
Pineapple ரசம்

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலில், பச்சை மிளகாய், அரைத்து வைத்த மிளகு சீரகம்  ஆகியவற்றை சேர்த்து கடாயில் ஊற்றவும். பின்னர் அதிலேயே மஞ்சள் தூள் ரசப்பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு ரசம் கொதிக்கத் தயாராகும் நிலையில் அரைத்து வைத்துள்ள அன்னாசிப் பழச்சாற்றை அதில் சேர்த்துக் கிளறவும். 

இறுதியாக கொஞ்சம் சூடானதும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து கலக்கிவிட்டு அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கினால், ஆரோக்கியமான அன்னாசிப்பழ ரசம் ரெடி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com