வீட்டிலேயே செய்யலாம் அசத்தலான பீஸ்ஸா சாஸ்!

பீஸ்ஸா சாஸ்
பீஸ்ஸா சாஸ்

ற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே ஸ்நாக்ஸ் சாப்பிடச் சென்றால் முதல் சாய்ஸ் வகை வகையான பீஸ்ஸாதான். பீஸ்ஸா செய்வதற்கு அடிப்படையாக அமைவது அதில் தடவும் ருசியான  சாஸ்தான்.  இந்த சாஸை நாம் வீட்டிலேயே செய்து பீஸ்ஸாவுடன் தந்து அசத்தலாம்.

இதற்கு தேவையான தக்காளி பூண்டு போன்றவைகள் பழுதில்லாமல் புதிதாக இருப்பது இதன் ருசிக்கு அவசியம். காரம் சேர்ப்பது அவரவர் விருப்பம்.

இதற்கு பயன்படுத்தப்படும் சில்லி ப்ளேக்ஸ் எனப்படும் மிளகாய்த் துகள்களை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.


சில்லி ப்ளேக்ஸ் செய்முறை:
சுத்தமான சிவப்பு மிளகாய் 100 கிராம் எடுத்து நன்கு சூடான கடாயில் இட்டு மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுத்து அடுப்பை அணைத்து கடாயின் சூட்டிலேயே 5 நிமிடங்கள் விட்டுப் பின் ஆறியதும் மிக்சியிலிட்டு ஒரு சுற்று மட்டும் சுற்றினால் சில்லி ப்ளேக்ஸ் ரெடி. காய்ந்த மிளகாய் நன்றாக வறுபட்டு மொறு மொறு என்று இருக்கும் என்பதால் எளிதில் பொடியாகும்..இதை காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து 3 மாதம் வரை பயன்படுத்தலாம். இதை பீஸ்ஸா மட்டுமின்றி பாஸ்தா,  வறுவல் போன்ற ரெசிபிகள் செய்யும் போதும் பயன்படுத்தலாம்.

இனி பீஸ்ஸா சாஸ் தயாரிப்பு முறை பார்க்கலாம்.

தேவையானவை:

பழுத்த கெட்டித் தக்காளிகள்- 6
காஷ்மீர் மிளகாய் -2
பெரிய வெங்காயம் - 2நறுக்கியது
பூண்டு - 10 பற்கள்
உப்பு -தேவைக்கு
சர்க்கரை - 1 ஸ்பூன்
தக்காளி கெட்சப்- 2 ஸ்பூன்
ஆர்கனோ - 1 ஸ்பூன் (கடைகளில் கிடைக்கும் வாசனை மூலிகை)
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 3 ஸ்பூன்
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1 டீஸ்பூன் 

செய்முறை:
ரு அகன்ற பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி கத்தியால் மேலே நீளமாக கீறிய முழுத் தக்காளிகள், காஷ்மீர் மிளகாய், நான்காக நறுக்கியது வெங்காயம் மூன்றையும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். ஆறியவுடன் நீரை வடித்து தக்காளியை தனியாக எடுத்து அதன் தோலை நீக்கி ஆறவிடவும். (கத்தியால் கீறியதால் நீக்குவதற்கு எளிதாக இருக்கும்) விதைகளைத் தவிர்க்க வேண்டும் என்றால் இரண்டாகப் பிளந்து அவற்றை நீக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மூட்டு வலிகளைக் குறைக்கும் சில ஆரோக்கிய உணவுகள்!
பீஸ்ஸா சாஸ்

மிக்சி ஜாரில் வேகவைத்த வெங்காயத்துடன் மிளகாய் , தக்காளிகளைப் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடையை அடுப்பில் வைத்து அதில் ஆலிவ் ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் நறுக்கிய பூண்டு இட்டு வாசம் வரும்வரை வதக்கி அரைத்த தக்காளி விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். தக்காளி விழுது கொதிக்கும் போது மேலே தெளிக்க வாய்ப்புண்டு என்பதால் மேலே மூடி போட்டு நல்லது. தக்காளி விழுது கொதித்ததும் அதில் தேவையான அளவு உப்புடன் சர்க்கரை, ஆர்கனோ, சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு அதில்  தக்காளி கெட்சப், (மிக்ஸட் ஹெர்ப்ஸ் இருந்தால்) சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு பிஸ்ஸாவில் தடவுமளவுக்கு கெட்டியானவுடன் இறக்கினால் அருமையான பிஸ்ஸா சாஸ் ரெடி.

இதை பிரிட்ஜில் வைத்து 2 வாரம் வரை பயன்படுத்தலாம். (கெடாமல் இருக்க கைகளால் எடுப்பதையும் நீருள்ள கரண்டி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.)

குறிப்பு- காஷ்மீரி மிளகாய்க்கு பதில் சிவப்பான வரமிளகாயும் பயன்படுத்தலாம். ருசி தூக்கலாக சர்க்கரை அவசியம் சேர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com