உருளைக்கிழங்கு இல்லாத பூரி மசாலா செய்யலாம் வாங்க!

Poori masala without potatoes.
Poori masala without potatoes.

பூரி என்றாலே அனைவருக்கும் உருளைக்கிழங்கு மசாலா தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா என்பது நம் மனதில் பதிந்துவிட்டது. ஆனால் அதிகமாக உருளைக்கிழங்கை உட்கொள்வது வாயுத் தொல்லையை அதிகரிக்கக்கூடும். அதே நேரம் சில சமயங்களில் பூரி செய்யும்போது உருளைக்கிழங்கு இருக்காது. அதுபோன்ற தருணங்களில் உருளைக்கிழங்கு இல்லாமலேயே சுவையான பூரி மசாலா செய்யலாம். இதன் செய்முறை சுலபமாக இருப்பது மட்டுமின்றி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சுவையாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்: 

பச்சை பட்டாணி -  ½ கப்

கடலை மாவு - 2 டீஸ்பூன்.

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

தக்காளி - 1

வெங்காயம் - 3 

எண்ணெய் - 2 டீஸ்பூன் 

இஞ்சி - சிறிதளவு

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 2

செய்முறை: முதலில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். அடுத்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் பச்சை பட்டாணி தேவையான நீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். 

இறுதியில் கடலை மாவை தண்ணீரில் கரைத்து அதையும் வாணலியில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால், உருளைக்கிழங்கு இல்லாமலேயே சுவையான பூரி மசாலா ரெடி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com