

உங்க வீட்ல இந்த இரண்டு பொருட்கள் இருக்கா? அப்போ எண்ணெய்ப் பிசு பிசுப்பின்றி உப்பி வரும் பூரி செய்வது சுலபமாயிற்றே!
இந்தியர்களின் தினசரி உணவில் அடிக்கடி இடம் பெறுவது பூரி-சப்ஜி என தாராளமாக கூறலாம். ஆனால், பூரி உறிஞ்சுகொள்ளும் அதிகளவு எண்ணெயானது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மை. பிசு பிசுப்பின்றி பேக்கரி பன் போல உப்பி வரும் பூரி செய்ய உங்க சமையல் அறையில் இருக்கும் இரண்டு பொருட்கள் போதும்.
கொதிக்கும் எண்ணெயில் சிறிது பேக்கிங் சோடாவும் உப்பும் சேர்த்து பூரி பொரிக்கும்போது, அவை பூரியின் மேற்பரப்பில் எண்ணெய் ஒட்டுவதை தடுக்கின்றன. பூரிமாவுடன் கலந்துள்ள ஈரத்தன்மையுடன் வினை புரிந்து பூரி விரைவாக பிசு பிசுப்பின்றி மொறு மொறுப்புத் தன்மையடையவும் உதவி புரிகின்றன.
எண்ணெயானது பூரியை ஊடுருவி உட்புகுவதை சால்ட் கிரிஸ்டல்கள் தடுத்துவிடுகின்றன. பொரித்தெடுத்த பூரிகள் மீது மிகச் சிறிதளவு உப்பு தூவி வைப்பதும் எண்ணெயை பிரித்தெடுக்க உதவும்.
சூடான எண்ணெயில் சேர்க்கப்படும் பேக்கிங் சோடா, சமைக்கும்போது கார்பன்டை ஆக்சைடை வெளியேறச் செய்கிறது. இந்த வாயு சிறிய குமிழ்களை உற்பத்தி செய்து சமைக்கப்படும் பொருள், மென்மையான கிரிஸ்பி டெக்ச்சர் பெற உதவுகிறது. உணவுப் பொருளின் உள்ளே எண்ணெய் புகுவதையும் இந்த பபிள் தடுத்து நிறுத்துகிறது. பேக்கிங் சோடா மற்றும் உப்பு இரண்டையும் பூரி மாவுடன் சேர்த்து பிசைந்தாலும், அது மாவை நுரைக்கச் செய்து, பூரியை அதிக ஆரோக்கியம் உடையதாகவும், எண்ணெய் ஒட்டாமலும் தயாரிக்க உதவி புரியும்.
பேக்கிங் சோடாவை சூடான எண்ணெயில் சேர்க்கும்போது அது இரசாயன மாற்றமடைந்து எதிர்வினையாற்றக் கூடியதாக உள்ளதால் பொதுவாக இந்த முறையை அதிகம் பின்பற்றுபவர் இல்லை. உப்பு எண்ணெயில் கரையாது.
பூரி மாவிலுள்ள ஈரப்பசையை மட்டும் உறிஞ்சி, பூரி விரைவாக கிரிஸ்பித்தன்மை பெறவும் ஆயில் ஒட்டாமல் தயாராகவும் உதவுவதால், சூடான எண்ணெயில் உப்பு தூவுதல் மற்றும் சுட்ட பூரிகள் மீது படர்ந்திருக்கும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி எடுக்கவும் உப்பு தூவி வைக்கும் முறை பரவலாக பின் பற்றப்படுகிறது.