உருளைக்கிழங்கு சிவ்டா மற்றும் சத்தான மாலாடு!

healthy snacks recipes
healthy snacks recipesImage credit - pixabay
Published on

உருளைக்கிழங்கு சிவ்டா:

உருளைக்கிழங்கு 1/2 கிலோ

நைலான் ஜவ்வரிசி 1/2 கப்

வேர்க்கடலை  1/2 கப்

திராட்சை 50 கிராம்

முந்திரி 100 கிராம்

கொப்பரை தேங்காய் 1/4 கப்

உப்பு தேவையானது

மிளகுத்தூள் (அ)

மிளகாய் தூள்.   1 ஸ்பூன்

சர்க்கரைப் பொடி 2 ஸ்பூன்

உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிது தடிமனாக துருவிக் கொள்ளவும். இதனை குளிர்ந்த நீரில் போட்டு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இதனை ஈரம் போக காட்டன் துணியில் பரத்தி வைத்து அரை மணி நேரம் கழித்து எண்ணெயில் மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.

நைலான் ஜவ்வரிசியை வெறும் வாணலியில் நன்கு பெரிதாக பொரியும் வரை வறுக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பால் போன்ற வெள்ளை நிறம் வரும் வரை வறுத்தெடுக்கவும். இதே போல் முந்திரிப் பருப்பு, கொப்பரைத் தேங்காய் துண்டுகளையும் குறைந்த தீயில் மிதமான சூட்டில் வறுத்தெடுக்கவும். காய்ந்த திராட்சை, வேர்க்கடலை ஆகியவற்றையும் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த அனைத்தையும் சேர்த்து உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் அல்லது மிளகுத்தூள் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு தேவைப்படும் சமயம் எடுத்து சாப்பிட மிகவும் ருசியான உருளைக்கிழங்கு சிவ்டா தயார்.

மாலாடு:

மிகவும் ருசியானது. வாயில் போட்டதும் கரையக்கூடியது. ஏலக்காய், நெய்யின் மணமும், பொட்டுக்கடலையின் ருசியும் அபாரமாக இருக்கும்.

பொட்டுக்கடலை  200 கிராம்

சர்க்கரை  200 கிராம்

ஏலக்காய் 4

முந்திரிப்பருப்பு 10

நெய் 100 கிராம்

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் மசாலாக்கள் கெட்டுப் போகாமல் இருக்க எளிய டிப்ஸ்!
healthy snacks recipes

பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் சூடு செய்து ஏலக்காயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடித்து சலித்தெடுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்தெடுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.

இப்பொழுது அகலமான பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, பொட்டுக்கடலைமாவு, வறுத்த முந்திரித் துண்டுகள் சேர்த்து ஈரம் இல்லாத கரண்டி கொண்டு கலக்கவும். இதில் நெய்யை சூடு செய்து சேர்த்துக் கலந்து அழுத்தி கெட்டியான உருண்டைகளாக பிடிக்கவும். நெய்யின் சூட்டில் சர்க்கரை இளகி உருண்டை பிடிக்க எளிதாக வரும். ஏலக்காய் மணத்துடன் முந்திரிப் பருப்பின் ருசியும் சேர்ந்து சத்தான மாலாடு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com