Pumpkin Gothsu Recipe: பாரம்பரிய பரங்கிக்காய் கொத்சு!

Pumpkin Gothsu Recipe
Pumpkin Gothsu Recipe

இந்த பரங்கிக்காய் கொத்சு உண்மையிலேயே ரொம்ப சிம்பிளாகவும், ருசியாகவும் இருக்கும். இது செய்வதற்கு பொடியோ, பருப்போ எதுவும் தேவையில்லை. அந்த காலத்தில் என் அம்மா பொங்கல், இட்லி, தோசை, சூடான சாதத்திற்கு இந்த கொத்சைத் தான் செய்வார்கள். அதிக பொருள் தேவைப்படாத, அதேசமயம் மிகவும் ருசியான இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பரங்கிக்காய் கொத்சு செய்யத் தேவையான பொருட்கள்:

  • பரங்கிக்காய் ஒரு பத்தை 

  • புளி எலுமிச்சை அளவு 

  • உப்பு தேவையானது 

  • நல்லெண்ணெய் 4 ஸ்பூன் 

  • மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்

  • தாளிக்க:கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தலா 1 ஸ்பூன் 

  • பச்சை மிளகாய் 2

  • காய்ந்த மிளகாய் 2

  • கறிவேப்பிலை சிறிது

  • பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

பரங்கிக்காய் கொத்சு செய்முறை:

பரங்கிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் நறுக்கியது, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு  கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்.

இப்பொழுது நறுக்கி வைத்துள்ள பரங்கி துண்டுகளை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும். இதற்கு தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர்க்க கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை விட்டு புளி வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
ரத்த சர்க்கரையைக் குறைக்க வேண்டுமா? கிராம்பு இருக்க பயம் எதற்கு?
Pumpkin Gothsu Recipe

ஒரு 5 நிமிடம் கொதித்ததும் வெல்லம் சிறு துண்டு போட்டு, ஒரு கொதி கொதித்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். மணக்க மணக்க பரங்கிக்காய் கொத்சு தயார். 

இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள மிகவும் அருமையான  சைட் டிஷ் இது.

பரங்கிக்காய்க்கு பதில் பிஞ்சு கத்திரிக்காய் கொண்டும் இதே போல் கொத்சு செய்ய மிகவும் ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com