பூசணிக்காய் சூப் செய்யத் தெரியுமா உங்களுக்கு? வேற லெவல் டேஸ்ட்! 

pumpkin soup recipe
pumpkin soup recipe
Published on

இதுவரை பூசணிக்காயை நீங்கள் விதவிதமாக பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் எப்போதாவது பூசணிக்காய் வைத்து சூப் முயற்சித்ததுண்டா. பூசணி சூப் உண்மையிலேயே மிகவும் சுவையான ஆரோக்கியமான உணவாகும். உலக அளவில் பூசணிக்காய் சூப் விதவிதமாக செய்யப்பட்டாலும், இந்திய மசாலா பொருட்களின் கலவையில் இதன் சுவை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது எனலாம். எனவே இந்த பதிவில் சுவையான பூசணிக்காய் சூப் எப்படி செய்வது என நான் உங்களுக்கு சொல்லித் தரப் போகிறேன்.  

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் - ½ கிலோ

வெங்காயம் - 1

பூண்டு - 3 பல்

இஞ்சி - சிறு துண்டு

நெய் - 2 ஸ்பூன் 

சீரகம் - 1 ஸ்பூன் 

தனியா தூள் - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

சிவப்பு மிளகாய் தூள் - ½ ஸ்பூன் 

கரம் மசாலா - ½ ஸ்பூன் 

உப்பு  - தேவையான அளவு

தேங்காய் பால் - 1 கப்

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து சீரகத்தை போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். 

பின்னர் தோல் சீவப்பட்ட, விதைகள் அகற்றப்பட்ட பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் சேர்த்து நன்றாகக் கிளறிவிடுங்கள். பின்னர் குறைந்த வெப்பத்தில் அப்படியே பூசணிக்காயை வேக விடவும். பூசணிக்காய் வேகும்போதே அதிலிருந்து தண்ணீர் சுரக்க ஆரம்பிக்கும். அடுத்ததாக மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, தனியா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
Evolution of Money in India: இந்தியாவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் எது தெரியுமா?
pumpkin soup recipe

அடுத்ததாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மேலே மூடி போட்டு குறைந்த வெப்பத்தில் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பூசணிக்காய் மென்மையாக வெந்ததும், அவற்றை ஏதேனும் கரண்டி பயன்படுத்தி பிசைந்துவிடுங்கள். இப்படி பிசையும்போது கவனமாக இருங்கள், சூடான சூபை கையில் கொட்டிக்கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது. 

பூசணிக்காயை பிசைந்ததும், தேங்காய் பால் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு, சூப்பில் தேவையான அளவு உப்பு இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்ளுங்கள். இச்சமயத்தில் சூப் கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

இறுதியில் கொத்தமல்லித் தழைகளை பொடியாக நறுக்கி அதன் மேலே தூவி இறக்கினால், சுவையான பூசணிக்காய் சூப் தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com