பஞ்சாபி சோளே மசாலா

பஞ்சாபி சோளே மசாலா
பஞ்சாபி சோளே மசாலா
Published on

தேவையான பொருட்கள்:

1. 2 கப் -வெள்ளை கொண்டைகடலை

2. 5-6 - ஏலக்காய்

3. 4-5 மிளகு

4. 2- பட்டை

5. 2 -தேநீர் பைகள்

6. உப்பு - தேவையான அளவு

7. 5 கப் தண்ணீர்

8. மசாலாவிற்கு

9. 1 தேக்கரண்டி எண்ணெய்

10. 3-4 கிராம்பு

11. 3/4 கப் - வெங்காயம்

12. 2 டீஸ்பூன்- இஞ்சி-பூண்டு விழுது

13. 2 1/2 கப் -தக்காளி விழுது

14. 1/2 டீஸ்பூன் -மிளகாய் தூள்

15. 1/2 டீஸ்பூன்- மிளகு தூள்

16. 3/4 டீஸ்பூன் -சீரக தூள்

17. உப்பு - தேவையான அளவு

அலங்கரிக்க:

1. 1 தேக்கரண்டி நெய்

2. 1 அங்குல இஞ்சி, ஜூலியன்னாக வெட்டவும்

3. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா

4. 1டீஸ்பூன் - வெங்காய துண்டுகள்

5. 2 தேக்கரண்டி- நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை:

1. கொண்டைக்கடலை இரவில் போதுமான தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில், தண்ணீரை வடிகட்டவும்.

2. குக்கரில் ஊறவைத்த கொண்டைக்கடலை, 2 தேநீர் பைகள், ஏலக்காய்,பட்டை, உப்பு மற்றும் 4 முதல் 5 கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

3. ஒரு வாணலியில், 1 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும். சூடானதும், கிராம்பு மற்றும் அரைத்த வெங்காயம் சேர்க்கவும்.

4. பச்சைவாசனை வாசனை நீங்கும் வரை வெங்காயத்தை வதக்கவும்.

5. இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து இஞ்சி-பூண்டு வாசனை நீங்கும் வரை 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.

6. இப்போது தக்காளி கூழ் சேர்க்கவும், கிளறி, நடுத்தர-குறைந்த தீயில் 12-15 நிமிடங்கள் வதக்கவும்.

7. பின்னர் சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள், சீரகம் தூள், உப்பு சேர்த்து 1-2 நிமிடம் கலக்கவும்.

8. அடுத்து சுண்டல் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

9. சுண்டல் வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும்.

10. 10 -20 நிமிடங்களுக்குப் சிறுதீயில் வைக்கவும்.

11. ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் இஞ்சி சேர்த்து 1 நிமிடம் வதக்கி கிரேவியில் சேர்க்கவும்.

12. சிறிது கரம் மசாலா, நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com