
தேவையான பொருட்கள்:
இளசான முள்ளங்கி - 1, சிறிய கேரட் - 1, பச்சைப் பட்டாணி ஒரு கைப்பிடி அளவு, முள்ளங்கி இலை - (இருந்தால்) பொடியாக நறுக்கியது, ஒருகைப்பிடி அளவு, சோள மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை – ½ டீஸ்பூன், எலுமிச்சை சாறு – ½ டீஸ்பூன், கொத்துமல்லி - பொடியாக நறுக்கியது – ¼ கப், சோளமாவு - 2 டீஸ்பூன்.
செய்முறை:
முள்ளங்கியைத் தோல் சீவிப் பொடிப்பொடியாக சீவி, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் விட்டு, விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். சிறிய வாணலியில், வெண்ணெயுடன், கேரட் துருவல், பச்சைப்பட்டாணி, முள்ளங்கி இலை ஆகியவற்றை மிதமான தீயில், நன்கு வதக்கவும். அதை, அரைத்த முள்ளங்கி விழுதுடன் கலக்கவும். பின் சோளமாவுடன் தண்ணீர் சேர்த்து விழுதாகக் கரைத்து ஊற்றி, இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். கொத்துமல்லி இலைகளை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும். தேவையான அளவு உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்துப் பரிமாறவும்.