மழைக்கால முன்னெச்சரிக்கை பராமரிப்பு – கவனிக்க வேண்டியவை!

மழைக்கால முன்னெச்சரிக்கை பராமரிப்பு – கவனிக்க வேண்டியவை!

மையலறையில் காற்றோட்டம் இருக்க வேண்டும்.எதிரெதிரிலோ பக்கவாட்டுகளிலோ ஜன்னல்கள் இருந்தால் தினமும் சிறிது நேரமாவது அவற்றைத் திறந்து வையுங்கள்.

முடிந்தவரை சமையலறை ஈரமில்லாமல் இருக்கட்டும். மேடை நன்கு சுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருப்பது நல்லது. உணவுப் பொருள்கள் மூடியே வைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் பொதுவான விதிகள். என்றாலும் மழைக்காலத்தில் இவை மேலும் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டியவை.

ழைக்காலத்தில் ஒருவித துர்நாற்றம் சமையலறையில் நிலவ வாய்ப்பு உண்டு. வாசனைப் பொருள் சேர்க்கப்பட்ட உப்புகளை (perfumed bath salts) சமையலறை அலமாரிகளின் கீழ்ப்பகுதியில் போட்டு வைத்தால் இந்தத் துர்நாற்றம் வராது.

ருப்புகளை நன்கு உலர வையுங்கள். பின் அவற்றைக் காற்றுப் புகாத ஜாடிகள் அல்லது பெட்டிகளில் வையுங்கள். அப்போதுதான் ஈரப் பதம் மற்றும் பூஞ்சை அவற்றில் பரவாமல் இருக்கும்.

சில துளிகள் விளக்கெண்ணெயை பருப்புகள் அடங்கிய பெட்டிக்குள் தடவி வைத்தால் பூச்சிகள் அண்டாது.

ரைப்பகுதியில் ஆங்காங்கே துளைகள் இருந்தால் அவற்றை சிமென்ட் அல்லது மண் கொண்டு அடைத்து விடுவது நல்லது. அப்போதுதான் அவற்றின் வழியாக மண்புழு, கரப்பான் பூச்சி போன்றவை வராது இருக்கும். அப்படி அடைத்த பின் அவற்றின்மீது கொஞ்சம் பூச்சிக்கொல்லி மருந்தையும் தெளிப்பது நல்லது.

ழைக்காலத்துக்குச் சற்று முன்பே சமையலறைப் பொருட்களை வைத்துள்ள டப்பாக்கள் மற்றும் ஜாடிகளை சூரிய வெளிச்சத்தில் கொஞ்சம் உலர வையுங்கள்.

சிறு மணல் பாக்கெட்டுகளை (Silicon packets) சமையலறையில் ஆங்காங்கே வைத்தால் அவை ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com