ராஜஸ்தானி ரவா பூரி... சைட் டிஷ் தேவையில்ல எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க!

ரவா பூரி...
ரவா பூரி...

ராஜஸ்தான், பஞ்சாப் பக்கமெல்லாம் போனால், இந்த பூரி ரொம்ப பிரபலம். தொட்டுக்க கூட எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம். இந்த பூரி செய்வதும் மிகவும் சுலபம். வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

ராஜஸ்தானி ரவா பூரி செய்ய தேவையான பொருட்கள்:

ரவை-1 கப்.

கோதுமை மாவு-1 கப்.

வேக வைத்த உருளை -1

சில்லி பிளேக்ஸ்-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி- தேவையான அளவு.

சீரகத்தூள்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

ராஜஸ்தானி ரவா பூரி செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் ஒரு கப் ரவை எடுத்து கொண்டு அதில் சுடு தண்ணீர் சிறிது சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 10 நிமிடம் மூடி வைத்து விடவும்.  இப்போது நன்றாக ஊறியிருக்கும் ரவையுடன் ஒரு கப் மைதா மாவு, வேக வைத்த  உருளை கிழங்கு 1 , சில்லி பிளேக்ஸ் 1 தேக்கரண்டி, சிறிது கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, சீரகப்பொடி 1 தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து நன்றாக தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
அன்பு எனும் கலை சொல்லும் பாடம் என்ன?
ரவா பூரி...

இப்போது பூரி போடுவது போல சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு மாவை நன்றாக தேய்த்து எடுத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணையை கொதிக்க வைத்து தேய்த்து வைத்த பூரியை ஒவ்வொன்றாக அதில் போட்டு நன்றாக உப்பி வரும் வரை வேகவைத்து எடுக்கவும். இப்போது சுவையான ராஜஸ்தானி ரவை பூரி தயார். இத்துடன் பூரி கிழங்கோ அல்லது சென்னா மசாலாவோ சேர்த்து வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். நீங்களும் வீட்டில் செய்து பார்த்து விட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com