ஸ்ரீலங்காவின் புகழ்பெற்ற வட்லாப்பம் போல அல்லாமல் நாம ரமலான் ஸ்பெஷலாக கொஞ்சம் மாற்றி செஞ்சிருக்கோம். எப்படி இந்த வட்லாப்பம் செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
முட்டை-5
சக்கரை-100கிராம்.
ஏலக்காய்-3
தேங்காய் பால்-100ml.
உப்பு- ஒரு சிட்டிகை.
முந்திரி-2
பாதாம் ஊறவைத்து தோலுரித்தது-4
தேங்காய் துண்டுகள்-1 தேக்கரண்டி.
பொட்டுக்கடலை-1 தேக்கரண்டி.
நெய்- தேவையான அளவு.
பாதாம், பிஸ்தா- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பவுலில் 5 முட்டைகளை உடைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் 100 கிராம் சக்கரை, ஏலக்காய் 3 சேர்த்து நன்றாக அரைத்து பவுடர் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் வைத்திருக்கும் 5 முட்டையை சேர்த்துக்கொண்டு அத்துடன் அரைத்து வைத்திருக்கும் சக்கரை கலவை, ஒரு சிட்டிகை உப்பு , 100ml கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். இப்போது மிக்ஸியை ஒரு நிமிடத்திற்கு நன்றாக அடித்து எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அடித்து வைத்திருக்கும் கலவையை வடிக்கட்டி அந்த பாத்திரத்தில் ஊற்றவும்.
அடுத்து மிக்ஸியில் ஒரு தேக்கரண்டி தேங்காய் துண்டுகள், 1 தேக்கரண்டி பொட்டுகடலை, தோலுரித்த பாதம் 4, முந்திரி 2. இதையெல்லாம் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அரைத்த பேஸ்ட்டை ஏற்கனவே வைத்திருக்கும் கலவையில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இப்போது குக்கரில் தண்ணீர் விட்டு ஒரு ஸ்டேன்ட் போட்டு பாத்திரத்தை வைக்கவும். தண்ணீர் உள்ளே போகாதபடி மூடிவிடவும். இப்போது 8 முதல் 10 விசில் வரை வைத்து எடுக்கவும். பாதாம்,பிஸ்தாவை நெய்யில் வறுத்து மேலே அலங்கரிக்கவும். அவ்வளவு தான் ரமலான் ஸ்பெஷல் வட்டலாப்பம் தயார். வீட்டிலே ஒருமுறை இந்த ரமலானுக்கு செஞ்சு பாருங்க, செம டேஸ்டாக இருக்கும்.