
இன்றைக்கு சுவையான கார்ன் பகோடா மற்றும் வெற்றிலை பாயாசம் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கார்ன் பகோடா செய்ய தேவையான பொருட்கள்.
கார்ன்-1 கப்.
வெங்காயம்-1
இஞ்சி-1 துண்டு.
பச்சை மிளகாய்-1
கருவேப்பிலை-சிறிதளவு.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
சீரகத்தூள்-1 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
கடலை மாவு-1 கப்.
அரிசி மாவு-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
கார்ன் பகோடா செய்முறை விளக்கம்.
முதலில் கார்னை வேக வைத்து அதை ஒரு கப் அளவிற்கு ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். இதில் நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி பொடியாக நறுக்கியது 1 துண்டு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 1, கருவேப்பிலை பொடியாக நறுக்கியதை சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, சீரகத்தூள் 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு, கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இப்போது இதில் 1 கப் கடலை மாவு, அரிசி மாவு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை பக்கோடா பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் நன்றாக காய்ந்ததும் செய்து வைத்திருந்த மாவை சிறிது சிறிதாக எண்ணெய்யில் போட்டு நன்றாக பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கார்ன் பகோடா தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
வெற்றிலை பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்.
பாதாம் பிசின்-1 தேக்கரண்டி.
பாதாம்-10
முந்திரி-10
பிஸ்தா-10
வெற்றிலை-10
பால்-1 லிட்டர்.
சர்க்கரை-1 கப்.
குங்குமப்பூ-சிறிதளவு.
ஏலக்காய் தூள்- சிறிதளவு.
வெற்றிலை பாயாசம் செய்முறை விளக்கம்.
முதலில் 1 தேக்கரண்டி பாதாம் பிசினை ஊற வைத்துக் கொள்ளவும். பாதம் 10, முந்திரி 10, பிஸ்தா 10 ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் 1 லிட்டர் பாலை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். அதில் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து கலந்துவிட்டு விட்டு சர்க்கரை 1 கப் சேர்த்து கலந்து விடவும். வெற்றிலை இலை பத்து எடுத்து மிக்ஸியில் அரைத்து அதனுடைய சாறு மட்டும் எடுத்து இதில் கலந்துவிட்டுக் கொள்ளவும்.
இப்போது குங்குமப்பூ சிறிதளவு, ஏலக்காய் தூள் சிறிதளவு, ஊறவைத்த பாதாம் பிசினை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான வெற்றிலை பாயாசம் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.