கோதுமை பழ ஹல்வா

கோதுமை பழ ஹல்வா

Published on

எல். உஷா குமாரி, சென்னை.

தேவை:

கோதுமை மாவு – 1 கப்

நாட்டுச்சர்க்கரை– 1 கப்

நெய் – 1 கப்

பழங்கள் – 1 கப் (ஆப்பிள் வாழை திராட்சை )

ஏலக்காய் 3

முந்திரி, பாதாம் – சிறுதளவு

செய்முறை:

சிறிதளவு நெய்யில் முந்திரி பாதாமை வறுக்கவும்.அதில் பொடியாக நறுக்கிய பழங்களை வதக்கவும். நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிண்டவும். கோதுமைமாவை நீரில் கரைத்து ஊற்றி கிண்டவும். நெய் சேர்த்து சுருள கிளறவும். அல்வா பதம் வந்த உடன் தட்டில் நெய் தடவி கொட்டி, ஆறியதும் துண்டு கள் போட்டு பரிமாறவும் சத்தான சுவையான அல்வா ரெடி

logo
Kalki Online
kalkionline.com