
ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்.
தேவையானவை:
பொடியாக நறுக்கிய காவி ஃப் ளவர்– 2கப்
சர்க்கரை– 1 கப்
துருவிய தேங்காய்– 1/4 கப்.
முந்திரி பருப்பு– 10.
ஏலத்துள்= 1/4 டீஸ்பூன்.
வெனிலா எசன்ஸ் –2 சொட்டு.
பால்– கால் கப்.
திராட்சை – 10 .
செய்முறை:
காலி ஃப்ளவரை இட்லி தட்டில் வேக வைத்து, ஆறிய பின்பு நெய்யில் வதக்கவும். பின்னர் அத்துடன் தேங்காய் துருவல் .முந்திரி பருப்பு .பால் சேர்த்து அரைக்கவும் .அடி கனமான வாணலியில் சர்க்கரை மூழ்கும் வரை நீரை ஊற்றி கரைந்ததும், அரைத்த விழுதை போட்டு கைவிடாமல் கிளறவும்.அல்வா பதம் வந்ததும் சிறிது நெய் விட்டு இறக்கவும் .பின்பு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, சேர்த்து வெனிலா எசன்ஸ் விட்டு கிளறவும்.
(குறிப்பு: இதில் நெய் அதிகமில்லை. அதனால் கொலஸ்ட்ரால் பயமில்லை).