ரோஸ்மில்க் அல்வா!

Halwa
Halwa

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

-இளவரசி வெற்றி வேந்தன்

தேவையான பொருட்கள் :

பால் - 3 கப்

சர்க்கரை - 3/4 கப்

நெய் - 1 கப்

ரோஸ்மில்க் ஃபிளேவர் - 1 டீஸ்பூன்

ரவை - 4 டீஸ்பூன்

தயிர் - 2 டீஸ்பூன்

முந்திரி - 10 - 15

பிஸ்தா - 2 - 4

செய் முறை:

முதலில் பாலை நன்றாக கொதிக்க வைக்கவும். பாதி ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.

பின்னர் ரவை சேர்த்து கிளறவும்.

பின்னர் பாலில் தயிர் சேர்த்து கிளறவும்.

பிறகு சர்க்கரை சேர்த்து நிறுத்தாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

அதனுடன் ரோஸ்மில்க் ஃபிளேவர் சேர்க்கவும்.

பிறகு நெய் சேர்த்து கிளறவும்.

அதனுடன் நறுக்கிய முந்திரியைச் சேர்க்கவும்.

வாணலியில் ஒட்டாமல் இருக்க அல்வாவை தொடர்ந்து கிளறவும்

சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும்...

logo
Kalki Online
kalkionline.com