ரோஜா அல்வா: சுவைத்துப் பாருங்கள், சொக்கிப் போவீர்கள்!

Rose halwa
Rose halwa
Published on

மனதை மயக்கும் ரோஜா அல்வா: எளிய செய்முறை

ரோஜா மலர்களின் நறுமணத்தையும், மென்மையான சுவையையும் ஒரு இனிப்பில் பெற முடியுமா? முடியும்! ரோஜா அல்வா, வழக்கமான அல்வாக்களைப் போல் அல்லாமல், ஒரு தனித்துவமான சுவையையும், நறுமணத்தையும் கொண்டது. இதை வீட்டில் செய்வது மிகவும் எளிது. உங்கள் வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தவும், ஒரு புதுமையான இனிப்பை சுவைக்கவும் இந்த செய்முறை உதவும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் ரவை 

  • 1 கப் சக்கரை 

  • 1 கப் பால் 

  • 1 கப் தண்ணீர்

  • ¼ கப் நெய்

  • ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்

  • ஒரு கைப்பிடி நட்ஸ்

  • 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் 

  • ரோஜா எசன்ஸ் சில துளிகள்

  • அழகுப்படுத்த ரோஜா இதழ்கள்

முதலில் அடி கனமான கடாயில் மிதமான சூட்டில் நெய் சேர்க்கவும். பின்னர் அதில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 

அடுத்ததாக ஒரு தனி வாணலியில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒன்றாகக் கொதிக்க விடவும். பின்னர் வறுத்த ரவையில் சூடான பால் மற்றும் தண்ணீர் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். கிளறும்போது கவனமாக இருங்கள்.

இந்தக் கலவையை குறைந்த வெப்பத்தில் ரவை வேகும் வரை சுமார் 10 நிமிடங்களுக்கு வேக விடவும். பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அல்வா பதம் கிடைக்கும்.

இப்போது ஏலக்காய் தூள், நட்ஸ், ரோஸ் வாட்டர் மற்றும் ரோஸ் எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். இது அல்வாவுக்கு ரோஜாவின் சுவை மற்றும் நறுமணத்தைக் கொடுக்கும். 

இப்போது தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்களுக்கு அல்வாவைக் கிளறிக் கொண்டிருந்தால், நீங்கள் எதிர்பார்க்கும் அல்வா பதம் வந்துவிடும். இப்போது அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடுங்கள். 

இறுதியில் அல்வா ஆறியதும் ரோஜா இதழ்களை மேலே தூவி அலங்கரித்தால் சூப்பர் சுவையில் ரோஸ் அல்வா தயார். 

இதையும் படியுங்கள்:
பார்கின்சன் நோயின் ஆரம்ப 7 அறிகுறிகள்… தெரிந்துகொள்வது அவசியம்!
Rose halwa

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com