சேலத்து ஸ்பெஷல் மாங்காய் கறி, மாங்காய் ஜெல்லி!

மாங்காய் சீசன் ஸ்பெஷல்!
ஸ்பெஷல் மாங்காய் கறி
ஸ்பெஷல் மாங்காய் கறிImage credit - youtube.com

சேலத்து ஸ்பெஷல் மாங்காய் கறி:

மாங்காய் கால் கிலோ 

கடலைப்பருப்பு 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

சோம்பு 1/2 ஸ்பூன்

பட்டை சிறு துண்டு

சீரகம் 1/2 ஸ்பூன்

மிளகு 1 ஸ்பூன்

இஞ்சி  1 துண்டு

மிளகாய் 4

சின்ன வெங்காயம் 1 கைப்பிடி

பெரிய வெங்காயம் பாதி

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

தக்காளி 1 

தனியா தூள் 1 ஸ்பூன்

உப்பு தேவையானது

தாளிக்க: கடுகு, கருவேப்பிலைை, நல்லெண்ணெய்

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் மூன்றையும் சிவக்க வறுத்து எடுக்கவும். அதே கடாயில் சோம்பு பட்டை, சீரகம், மிளகு, கருவேப்பிலை சிறிது சேர்த்து வறுத்து கடைசியாக பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

இவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிது கருவேப்பிலை சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். அத்துடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய மாங்காயை சேர்த்து அரை கப் நீர் விட்டு வேகவிடவும். முக்கால் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். மிகவும் ருசியான சேலத்து மாங்காய் கறி ரெடி. 

இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

மாங்காய் ஜெல்லி:

மாங்காய் 2 

சர்க்கரை 200 கிராம் 

தண்ணீர் ஒரு கப் 

மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வடிகட்டியில் நன்கு வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 

மாங்காய் ஜெல்லி
மாங்காய் ஜெல்லிImage credit - youtube.com

அடி கனமான வாணலியில் 200 கிராம் சர்க்கரை போட்டு அதனுடன் அரை கப் தண்ணீர் விட்டு மாங்காய் சாற்றையும் போட்டு நன்கு கிளறவும். அடுப்பை நிதானமாக எரிய விட்டு சிறிது உப்பு (கால் ஸ்பூன்) சேர்த்து நன்கு கிளறவும். இந்த கலவை நன்கு கெட்டியானதும் அதாவது வாணலியில் ஒட்டாமல் வரும் பதம் வரை கிளறி எடுக்கவும். சிறிதளவு தண்ணீரில் போட்டு கையால் எடுத்துப் பார்க்க அவை நீரில் கரையாமல் வந்தால் சரியான பக்குவத்தில் தயாராகி விட்டது என்று அர்த்தம். அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆறியதும் எந்த வடிவத்தில் வேண்டுமோ அம்மாதிரி வடிவம் உள்ள அச்சில் ஊற்றி ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுக்க சுவையான மாங்காய் ஜெல்லி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com