அட, அதெல்லாம் மறந்தே போச்சுங்க! எதெல்லாம்?

தேங்காய் துவையல்...
தேங்காய் துவையல்...Image credit - youtube.com

-தா சரவணா

ம்மில் யாருக்கெல்லாம் தேங்காய் துவையல் பிடிக்கும்? வீட்டில் குழம்பு வைக்க காய்கள் ஏதும் இல்லையென்றால், வீட்டில் இருக்கிற தேங்காயைத் துருவி அதில் நாலு மிளகாய் வைத்து, கொஞ்சம் புளி, கொஞ்சம் உப்பு இரண்டு பல் பூண்டு, நான்கைந்து சின்ன வெங்காயம் வைத்து, அரைத்து எடுத்து… ஆஹா! பழைய சோறாக இருந்தால் ஒரு சட்டி சோத்துக்கு எலுமிச்சை அளவு துவையல் இருந்தால் போதும். சுடு சோறாக இருந்தாலும் அதில் கொஞ்சம் துவையலைப் போட்டு பிசைந்துச் சாப்பிடும்போது அடடா..  அவ்வளவு அருமையாக இருக்கும். அதோடு தோசைக்கும் செம்ம டேஸ்டாக இருக்கும். இது பலருக்கும் ரொம்பப் பிடிக்கும். இரண்டு தோசைக்கு நாலு வகை சட்னி சாப்பிட்டாலும், இந்த ஒரு துவையலுக்கு ஈடாகாது.

அன்று சொமேட்டோ, சுவிக்கி எல்லாம் கிடையாது. ஓட்டல்களும் அதிகம் இல்லை. இருந்தாலும் எல்லா நேரங்களிலும் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டதும் இல்லை. அதனால் தேங்காய் துவையல் எங்களைப் போன்றவர்களுக்கு தேவாமிர்தம்தான்.

துவையல் ஒரு பக்கம். அது ஒருவித அபார ருசி! தேங்காய் பால் பிழிந்து, சுடு சாதத்தில் ஊற்றி யாராவது டேஸ்ட் பண்ணியிருக்கிறீர்களா? உண்மையாக அவ்வளவு சூப்பராக இருக்கும். இன்றைக்கு தமிழகத்தின் மறந்துபோன உணவுகளில் இந்தத் தேங்காய் பால் சாதமும் ஒன்று. வீட்டில் குழம்பு ஒன்னும் இல்லையா, உடனே தேங்காயைத் துருவி பால் எடுத்து உப்பு போட்டு சாப்பிட வேண்டியதுதான். வாய்க்குச் செல்லும் ஒவ்வொரு கவளமும் அம்புட்டு ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உச்சி முதல் பாதம் வரை புத்துணர்ச்சியூட்டும் 'ஸ்பா' தெரபி!
தேங்காய் துவையல்...

தேங்காயில் அத்தனை நன்மைகள் உண்டு. ஆனால், இப்போது யாரும் பெரிய  அளவில்  பயன்படுத்து வதில்லை. பல இடங்களில் தேங்காய் இல்லாமல்தான் குழம்பு வைக்கிறார்கள். சாம்பார் முதல் கறிக்குழம்பு வரை தேங்காய் சேர்ப்பதே இல்லை. சிக்கன், மட்டன், நண்டு குழம்புகளில் தேங்காய் சேர்க்காமல் இருந்தால், குழம்பு தண்ணி போலவும், ரசம் மாதிரியும் இருக்கும். இது தேங்காய் சேர்த்து உணவு உண்டவர்களுக்கு அறவே பிடிக்காது.

இப்போது புதிது, புதிதாக நோய்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், டாக்டர்களும் தங்கள் பங்குக்குத் தேங்காயை நம்மவர்களுக்கு எதிரிகளாகவே மாற்றி விட்டனர். அதனாலும் பலர் தேங்காயைத் தவிர்த்து வருகின்றனர். டாக்டர்கள் என்ன கூறுகிறார்களோ, அதை ஃபாலோ செய்வதுதானே இன்றைய உலகம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com