சர்க்கரை வள்ளி கிழங்கு வைத்து 2 பதார்த்தங்கள்!

சர்க்கரை வள்ளி கிழங்கு வடை...
சர்க்கரை வள்ளி கிழங்கு வடை...Image credit -youtube.com

கிழங்கு வகைகளில் அதிக சத்துள்ள கிழங்கு சர்க்கரை வள்ளி கிழங்கு. சிவராத்திரி அன்று இந்த கிழங்கில் இனிப்புகள் செய்து இறைவனுக்கு படைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இரண்டு இனிப்பு வகைகளை இங்கே பார்ப்போம்.

சர்க்கரை வள்ளி கிழங்கு இனிப்பு வடை

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளி கிழங்கு பெரியது, _2 மைதா மாவு _ 1 கப், சர்க்கரை _1 கப், நெய் _ 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் _200 கிராம், ஏலக்காய் தூள் _ 1 ஸ்பூன், முந்திரி பருப்பு _ 5, கிஸ்மிஸ் _ 5,

செய்முறை:

கிழங்கை வேகவைத்து தோலை உரித்து மசித்து கொள்ளவும். முந்திரியை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். மைதா மாவு, பாதி சர்க்கரை, ஏலக்காய், நெய், கிஸ்மிஸ், முந்திரி, எல்லாவற்றையும் மசித்து வைத்த கிழங்கு டன் போட்டு விரவி வடை மாவு பக்குவத்தில் பிசைந்து வைத்து கொள்ளவும். மீதி சர்க்கரையை வாணலியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கம்பி பாகாக காய்த்து இறக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கிழங்கு கலவையில் இருந்து சிறு சிறு உருண்டைகள் செய்து வடையாக தட்டி காயும் எண்ணெயில் போடவும். நன்றாக சிவந்து வருகையில் எடுத்து சர்க்கரை பாகில் போடவும். எல்லா வடைகளையும் தட்டி போட்டு இரண்டு மணி நேரம் ஊற விடவும். பின்னர் எடுத்து பரிமாறலாம். இது ஒரு வித்தியாசமான சுவையில் அருமையாக இருக்கும்.

சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளி கிழங்கு _1/2 கிலோ நெய் _ 5 ஸ்பூன் உலர் திராட்சை _10 முந்திரி பருப்பு _10 பாதாம் பருப்பு _ 5 காய்ச்சி ஆற வைத்த பால் 1 கப் வெல்ல பொடி _1/2 கப் குங்குமப்பூ _ சிறிது.

சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா
சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வாImage credit -youtube.com

செய்முறை:

முதலில் கிழங்கை வேகவைத்து தோல் சீவி, சீவலில் வைத்து துருவி வைத்துக் கொள்ளவும் வாணலியில் நெய் ஊற்றி திராட்சை, நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பை போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த பொருட்களை தனியாக வைத்து விட்டு வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு துருவி வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கை போட்டு வதக்கவும். கிழங்கில் உள்ள நெய் வற்றியதும் கூட1 ஸ்பூன் நெய் விட்டு கிளறவும். சற்று நேரம் கழித்து பாலை ஊற்றவும். பால் வற்றி வறண்டு வரும் வரை 10 நிமிடம் கிண்ட வேண்டும். ஈரம் இல்லாமல் கிழங்கு வெந்ததும் இதில் முதலில் ¼ கப் வெல்லம் பொடி போடவும். சிறிது கலந்து விட்டு சுவை பார்த்து தேவை என்றால் இன்னும் வெல்ல பொடி சேர்த்து கொள்ளவும். சர்க்கரை கலந்ததும் குங்குமப்பூ இருந்தால் போட்டு கொள்ளலாம். பின்னர் 1 ஸ்பூன் நெய் கூட சேர்க்கவும். பின் வறுத்து வைத்த முந்திரி, கிஸ்மிஸ் போட்டு இறக்கவும். சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா ரெடி.

மேலும், குழந்தைகளுக்கு பிஸ்கட் வகைகள் கொடுப்பதற்கு பதிலாக இந்த சர்க்கரை வள்ளி கிழங்கை வேகவைத்து சாப்பிட கொடுக்கும்போது இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரண சக்திக்கு உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com