சிலருக்கு புளிப்பு சோ்க்காமல் சாப்பாடு உப்பு போடாமல் சாப்பாடு என்றெல்லாம் மருத்துவ கட்டுப்பாடு இருக்கும். அப்படிப்பட்டவா்களுக்கு புளியில்லா சாம்பாா் தயாா் செய்வது எப்படி? இதோ இப்படிதாங்க...
தேவையானவை:
பாசிப்பருப்பு 50கிராம்
பொட்டுக்கடலை 25 கிராம்
கொள்ளு 25 கிராம்
தேங்காய்துருவல் 1 கப்
பூண்டு 2 பல்
மிளகாய் வற்றல் 5
கொண்டகடலை வெந்தது ஒருகப்
சிறிய வெங்காயம் 4
சீரகம் அரை டீஸ் பூன்
கொத்தமல்லி பொடி அரைடீஸ்பூன்
பெருங்காயபவுடா் ஒரு சிட்டிகை
நன்கு வதக்கி மசித்த முருங்கை கீரை ஒருகப்
சிறுது சிறியதாய் நறுக்கிய முருங்கைக்காய் துண்டு 10
கத்தாிக்காய் 2
உப்பு தேவைக்கேற்ப
கடுகு உளுந்து தாளிக்கதேவையானவை
செய்முறை:
பருப்பு, கொள்ளு, இரண்டையும், ஒருகப் தண்ணீா் சோ்த்து குக்காில் வேகவிடவும், மிளகாய் வற்றலை நன்கு மசிய அரைத்துக்கொள்ளவும்,
பூண்டு தேங்காய்துருவல், சீரகம், கொத்தமல்லிபொடி ,
பெருங்காயபொடி, பொட்டுக்கடலை, இவைகளை,தண்ணீா் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும்,
அடுப்பில் வாணலியில் நான்கு கப், தண்ணீா்விட்டு அரைத்து வைத்த இனங்களை போடவும், கத்தாிக்காயை துண்டு துண்டாக நறுக்கி
முருங்கைகீரை, வெங்காயம் இவைகளை சோ்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதித்ததும், வேகவைத்த பருப்பு கொள்ளு, கொண்டைக்கடலை மூன்றையும் போடவும், உப்பு போடவும்.
நன்கு கொதிவந்ததும் தாளிப்பு பொருட்களை தாளித்து சோ்க்கவும் கருவேப்பிலை கொத்தமல்லி, தழையும் போடலாம் .
புளி இல்லா குழம்புக்கு பொாித்தகுழம்பு வடகம், இருந்தாலும், பொடித்து சோ்த்துக்கொள்ளலாம், அரைத்து விட்ட சாம்பாா்போல இருக்கும், நன்கு வாசனையாகவும் இருக்கும்."