சாத்துக்குடி ஊறுகாய்!

சாத்துக்குடி ஊறுகாய்!
Updated on


தேவையான பொருட்கள்:
சாத்துக்குடி-6
மிளகாய்த் தூள்-2 ஸ்பூன்
உப்பு -  2  ஸ்பூன்
வினிகர்-1 ஸ்பூன்

செய்முறை:
குக்கரில்  சாத்துக்குடியைச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் போட்டு வினிகரைச் சேர்த்து ஒரு விசில் விடவும்.
குக்கர் ஆறிய பிறகு மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.
கடாயில்  எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.


இது சிறிது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருப்பதால் வித்தியாசமாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com