
சேனைக்கிழங்கில் வடையா ? ஆச்சரியமாக உள்ளதா? சாப்பிட்டு பாருங்கள் கரகர மொறு மொறுவென சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்த வடை. ரொம்ப மெனக்கெடாமல் செய்து விடலாம்.
மழையின் போது மட்டுமல்ல, டீ காபி உடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சேனை - 1/2 கிலோ
பொட்டுக்கடலை மாவு - நான்கு ஸ்பூன்
அரிசி மாவு - இரண்டு ஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் அல்லது பொடியாக நறுக்கியது - சிறிதளவு
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
காரப்பொடி - ஒரு ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சேனையை முழுவதுமாக வேகவிடாமல் முக்கால் பதத்திற்கு வேக விட்டு நன்கு கரண்டியால் கொரகொரப்பாக மசித்துக்கொண்டு பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு நசுக்கியது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், காரப்பொடி, சோம்பு ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் எண்ணெயில் வடைகளாக தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.
ருசியான வடை தயார்.