சேனைக்கிழங்கு கிரேவி-சூப்பர் சைடிஷ்!

சேனைக்கிழங்கு கிரேவி-சூப்பர் சைடிஷ்!

Published on

ன்ன சேனைக் கிழங்கில் கிரேவியா? என்று தயங்க வேண்டாம்.என்னதான் உருளைக்கிழங்கில் மசாலா சேர்த்து செய்து சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொண்டு அதன் சுவையில் மயங்கினாலும் வாய்வு தொந்தரவு ஏற்பட்டு சில சமயம் சாப்பிட தயங்குவோம். ஆனால் இந்த சேனைக்கிழங்கில் சூப்பரான கிரேவி செய்ய எந்த தொந்தரவும் இராது. ருசியும் அபாரமாக இருக்கும்.

இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி என தொட்டுக் கொள்ளலாம்.

கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு அரை கிலோ வெங்காயம் 2

தக்காளி -ஒன்று

இஞ்சி -ஒரு துண்டு

பூண்டு -ஆறு பற்கள்

காரப்பொடி -ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் -இரண்டு

சீரகம் -ஒரு ஸ்பூன்

பிரிஞ்சி இலை -ஒன்று

மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்

கரம் மசாலா- 1 ஸ்பூன்

கொத்தமல்லி- சிறிது

சேனைக்கிழங்கை முக்கால் பதத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளி வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, சீரகம் சேர்த்து வதக்கவும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து , வெங்காயம் தக்காளி ஆகியவற்றை அரைத்த பேஸ்ட்டை சேர்த்து கிளறவும். இஞ்சி பூண்டை நசுக்கி அல்லது மிக்ஸியில் அரைத்து சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் விட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாக சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். இதனை சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

logo
Kalki Online
kalkionline.com